காங்கிரஸ் பேசுவது என்ன மாறியான மதச்சார்பின்மை என்று புரியவில்லை என்று அசாமில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

அசாமில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், அங்குத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அமித்ஷா கூறியதாவது, ‘’  அசாமில் காங்கிரஸ், பத்ருதீன் அஜ்மல் தயவில் அமர்ந்து கொண்டிருக்கிறது.

கேரளாவில் முஸ்லிம் லீகுடன் கைகோர்த்துள்ளது. பெங்காலில் ஃபுர்புர ஷரீபுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் இவர்கள் மதச்சார்பின்மை பற்றிப் பேசுகிறார்கள். இது என்ன வகையான மதச்சார்பின்மை என்று எனக்குப் புரியவில்லை. 

இந்த காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்த மாநிலத்தில்  முஸ்லிம்கள் ஊடுருவல் அதிகமாகிவிடும். இதனால் அசாமின் பண்பாடு சீரழிந்து விடும். அசாமின் பண்பாட்டைக் காக்க நினைத்தால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். 

முன்னதாக ‘வளர்ச்சியுடன் செல்ஃபி’ பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்த அமித்ஷா.  தற்போது, ‘செல்ஃபி வித் டெவலப்மெண்ட்’ என்ற சோஷியல் மீடியா பிரச்சாரத்தையும் இந்த தேர்தலுக்காகத் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஐந்து  ஆண்டுகளில் அசாமை வளர்ச்சியின் பாதையில் பாஜக திருப்பியுள்ளது. ஊழல் இல்லாத மாநிலமாகவும் பாஜக சீரமைத்துள்ளது. மோடியின் ஆட்சியில் அமைதிப்பூங்காவாக மாறியுள்ளது அசாம். ” என்று பேசினார்.