டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 13 வது நாளாக நடைபெற்று வருவதால் தலைநகரம் டெல்லி பரபரப்பு நிலவி வருகிறது. விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை  தொடர்ந்து தோல்வியில் முடிந்து இருக்கிறது. கடும் குளிர் காலத்திலும் போராட்டம் நடத்துப்பவர்கள் மீது நீரை பீய்ச்சி அடிப்பது போன்ற காவல் துறையினரின் செயல்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறன. மத்திய அரசு புதிய வேளான் மசோதாக்களைத் திரும்பப் பெறும் வரை, எல்லைப் பகுதியிலேயே தொடர்ந்து போராட இருப்பதாகக் கூறுகிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்து மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து, இந்திய விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்த் என்னும் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் இன்று நடைப்பெறுகிறது.


வேலை நிறுத்த அறிவிப்புக்கு 15 எதிர்கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கி இருக்கின்றன. இந்நிலையில் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு கொடுத்துள்ளதால் தான் டெல்லியில் இந்த அளவிற்கு விவசாயிகள் உள்ளே வர முடிந்தது என்ற குற்றச்சாட்டும் மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.  


பந்த் அறிவித்திருக்கும் நிலையில் மத்திய அரசு கெஜ்ரிவாலை வீட்டுகாவலில் எதற்காக வைத்திருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் கலந்துக்கொள்ள திட்டமிட்டு இருந்தார்களா என்ற கேள்வி எழுந்துயிருக்கிறது. 


ஒரு மாநில முதல்வரை மத்திய அரசு வீட்டுக்காவலில் வைக்க முடியுமா?  சட்டத்தில் இடம் உண்டா? பந்த் அறிவித்திருக்கும் நிலையில் திடீரென அரவிந்த கெஜ்ரிவாலை வீட்டுக் காவலில் வைக்க என்ன அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. மாநில் முதலமைச்சர் எப்படி போராட்டத்தை தூண்டுவதற்கு துணை போக போகிறார் என  டெல்லி  அரசியல் தலைவர்கள் விவாதித்து வருகின்றனர்.