இளம் பெண்ணுக்கு கொரோனா என்று பொய் சொல்லி மர்ம நபர்கள் சிலர், ஆம்புலன்சில் கடத்தியதால் அவரது கணவன் கடும் அதிர்ச்சியைடந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த குற்றச்சாட்டிற்கு, மேலும் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது பெங்களூருவில் நடைபெற்ற இந்த சம்பவம்.

“பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால், வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்ற கூறி, கடந்த 3 ஆம் தேதி 28 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு, முழு கவச உடைகளை அணிந்து கொண்டு 4 பேர், ஆம்புலன் உடன் சென்று உள்ளனர்.

அப்போது, குறிப்பிட்ட அந்த 28 வயதா பெண், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்து விட்டு, அங்கிருந்து அவர்கள் சென்று விட்டன்.

இதன் தொடர்ச்சியாக மறு நாள் மீண்டும் அப்பகுதிக்கு ஆம்புலன்சில் வந்த 2 பேர், “குறிப்பிட்ட அந்த 28 வயது பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல வந்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பெண்ணை, அவருடைய குடும்பத்தினரே ஆம்புலன்சில் அனுப்பி வைத்து உள்ளனர். அத்துடன், “இந்த பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், செல்போனை உடன் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை” என்றும், ஆம்புலன்சில் வந்த 2 பேரும் கூறியதால், அந்தப் பெண் செல்போனை எடுத்துக் கொள்ளாமல் ஆம்புலன்சில் ஏறிச் சென்று உள்ளார். 

அதன் பிறகு, மறுநாள் காலையில் அந்த பெண்ணின் உடல் நிலை குறித்து அறிந்துகொள்ள அந்த பெண்ணின் கணவர், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உள்ளார். ஆனால், பொம்மனஹள்ளியில் இருந்து எந்த ஒரு பெண்ணும் கடந்த 4 நாட்களாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறி உள்ளனர்.

அதே போல், அப்பகுதி மாநகராட்சி சார்பில் “பொம்மனஹள்ளியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட வில்லை என்றும், பொம்மனஹள்ளியில் கொரோனா பாதித்தவர்களை தங்களுடைய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி மாநகராட்சியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை” என்றும், அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கணவர், வேறு சில மருத்துவமனைகளில் விசாரித்து உள்ளார். அப்போதும், அவருடைய மனைவி
பற்றிய எந்த தகவலும் அவருக்கு கிடைக்க வில்லை. இதனால் கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறி மர்ம நபர்கள், தன் மனைவியை கடத்தி சென்றிருக்கலாம் என்று, அவருக்கு சந்தேகம் வந்து உள்ளது.

இதனையடுத்து, கடத்தப்பட்ட பெண்ணின் கணவர் பொம்மனஹள்ளி காவல் நிகலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் கூட சீசனுக்கு தகுந்தார் போல், மர்ம நபர்கள் வித்தியாசம் வித்தியாசமாக யோசித்து யோசித்து தங்களது கை வரிசையை காட்டி வரும் நிலையில், தற்பொது ஒரு பெண்ணையே கடத்தி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையம், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.