பிச்சை எடுக்கும் பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் தான், இப்படி அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள கே.டி சாலை பகுதியில் இளம் பெண் ஒருவர், பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். மிக நீண்ட நாட்களாகவே, அந்த பகுதியில் அந்த இளம் பெண் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்ததை, அந்த பகுதியில் மது போதையில் திரியும் சிலர் கவனித்து உள்ளனர்.

இப்படியாக சில நாட்களாக மர்ம நபர்கள் அந்த பிச்சை எடுக்கும் பெண்ணை கவனித்துக்கொண்டே இருந்தார்கள். அதன் படி, இன்று அதிகாலை நேரத்தில், 5 பேர்
கொண்ட மர்ம நபர்கள் சேர்ந்து, அந்த பெண்ணை அங்கிருந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குத் தூக்கிச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு ஆட்கள் யாரும் வராத நிலையில், அந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக ஆல்கஹால் கொடுத்துக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து
உள்ளனர். அந்த 5 பேர் கொண்ட காம மிருகங்கள், அந்த இளம் பெண்ணை வெறி தீர வேட்டையாடிய பின்பு, “இவளை இப்படியே விட்டால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவாள்” என்று பயந்து, அந்த பெண்ணை அங்கேயே வைத்து மிகவும் கொடூரமான முறையில் அடித்தே கொலை செய்து உள்ளனர்.

அதில், அந்த பெண் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார். இதனையடுத்து, இறக்கமற்ற அந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் உடலை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த வழியாக சென்ற பொது மக்கள், அந்த பெண்ணின் உடலைப் பார்த்து, அந்த பகுதியில் இருக்கும் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அந்த பெண் பிச்சை எடுக்கும் தொழில் செய்து வந்ததால், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முற்றிலுமாக ஆய்வு செய்து வருகின்றனர். 

அந்த சிசிடிவியில் காட்சியில், அந்த பிச்சை எடுக்கும் பெண்ணை யாரெல்லாம் பின் தொடர்ந்து வருகிறார்கள்? யாரெல்லாம் அந்த பெண்ணிடம் வந்து பேசுகிறார்கள்? யாரெல்லாம் அந்த பெண்ணிற்கு உதவி செய்கிறார்கள்? என்ற கோணத்தில் போலீசார் ஆய்வு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பிச்சை எடுக்கும் பெண்ணை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

காமம், எதையும் செய்யும் என்பதற்கு, இந்த சம்பவமே ஒரு உதாரணம்!