ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கள்ளக்காதலன் தன்னை கண்டுகொள்ளவில்லை எனக் கூறி  முகத்தில் மிளகாய் பொடி தூவி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த காதலியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், சிந்தலபுடி மண்டலம் மல்லேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சத்துப்பள்ளியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.  இவரது மனைவி கஸ்தூரி சொந்த ஊரில் வசித்து வரும் நிலையில் யுவராஜ் தனது ஓட்டலில் பணிபுரியும் சத்யவதி என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக கள்ளகாதலில் ஈடுப்பட்டு ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சத்யவதியை கண்டுகொள்ளாமல் வீட்டிற்கு பணம் கொடுத்துள்ளான். இதனால் சத்யவதிக்கும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் அதனைத்தொடர்ந்து  பிரியாணி கடைக்கு வந்த சத்யவதி, யுவராஜை வெளியே அழைத்து  மிளகாய் பொடியை தூவி தாக்கினார். தன்னால்தான் யுவராஜ் இந்த நிலைக்கு வந்தான் என்றும், ஆனால் தற்போது என்னை புறக்கணிக்கிறான் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும் யுவராஜ் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம்  மனைவி பிள்ளைகளுக்கு அனுப்பி விட்டு என்னை புறகணித்து வருகிறான் என கூறிய சத்யவதியை தடுக்க முயன்றவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இதையடுத்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.   முகத்தில் மிளகாய் பொடி தூவி நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த காதலியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.