ஆக்ராவில் கள்ளக் காதலனுடன் ரூம் போட்டு மனைவி உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த போது, திடீரென உள்ளே புகுந்து கணவன் மனைவியை செருப்பால் அடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், “அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், விலகி இருக்க வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும்” என்று, மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்காட்டான சூழ்நிலையில், தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? என்று பலரும் சந்தேகங்களைக் கேட்ட நிலையில், “தங்களது துணையுடன் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்” என்று பல்வேறு உலக நாடுகளின் மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். 

ஆனால், பெரும்பாலான மக்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தங்கள் இஷ்டம் போல் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு, இந்த சம்பவமே ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தன் மனைவி மீது சந்தேகப்பட்டுள்ளார். கணவனின் சந்தேகம் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், ஒரு கட்டத்தில் சரவணனன் மனைவி அதே பகுதியைச் சேர்ந்த வேற ஒரு இளைஞனுடன் கள்ளக் காதலில் கலந்து உள்ளார். 

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த தகவலும், கணவன் சரவணனுக்குத் தெரிய வந்தது. இதனால், மனைவியைக் கள்ளக் காதலன் உடன் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டார். அதன்படி, மனைவியை பின் தொடர்வதையே சரவணன் வேலையாகக் கொண்டிருந்தான்.

அதன்படி, சரவணன் மனைவி, தனது கள்ளக் காதலன் உடன், ஆக்ராவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரூம் போட்டு உல்லாச இன்பத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். 

கள்ளக் காதலர்கள் இருவரும் உல்லாச இன்பத்தில் இருந்த அந்த நேரத்தில், திடீரென்று அந்த விடுதியின் ரூமிற்குள் வந்த சரவணன், தன் மனைவியைச் செருப்பால் அடித்து, கடுமையாகத் தாக்கி உள்ளான்.  

சரவணன் மனைவியும், அடி வாங்கிக்கொண்டே தன்னுடைய கீழாடையை அணிகிறார். ஆனால், கடும் ஆத்திரத்தில் இருந்த சரவணன், தன் மனைவியைத் தொடர்ந்து செருப்பால் அடித்துக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அடியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் சத்தம் போட்டுக் கதறுகிறார். இதனால், அங்கு விடுதியின் ஊழியர்கள் ஓடி வந்து சரவணனைத் தடுக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக, முதலில் சரவணனை அங்கிருந்து விடுதி ஊழியர்கள் வெளியேற்றுகிறார்கள். அதன் பிறகே, கள்ளக் காதல் ஜோடியையும், அவர்கள் வெளியே அனுப்புகிறார்கள்.

குறிப்பாக, விடுதி அறையில், கள்ளக் காதல் இன்பத்தில் இருந்த மனைவியை, கணவன் செருப்பால் அடித்த காட்சிகளை, அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அது இணையத்தில் வெளியாகி வைரலானது. 

இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த அந்த மாநில போலீசார், கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி வாடிக்கையாளர்களுக்கு ரூம் கொடுத்தது சட்டப்படி தவறு என்றும், இது தொடர்பாக தங்களுக்கு எந்த வித புகார்களும் வரவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, கள்ளக் காதலனுடன் ரூம் போட்டு உல்லாசம் அனுபவித்த மனைவியை, திடீரென உள்ளே புகுந்து கணவன் செருப்பால் அடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சிகளைப் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.