“பாய் ஃபிரண்டு இல்லையென்றால் மாணவிகள் கல்லூரிக்கு வரவேண்டாம்” என்று வெளியான போலி கடிதத்தால் சக கல்லூரி மாணவிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தியாவில் ஆக்ரா நகரில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதாவது, ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி பெயரில் வெளியான ஒரு போலியான கடிதம் ஒன்றுதான், அந்த மாநிலம் முழுவதும் இந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த கடிதத்தின் சாரம்சம் என்னவென்றால், “பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் உங்களுக்குப் பாய் ஃபிரண்டு கிடைக்கவில்லை என்றால், மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய முடியாது என்றும், அப்படி மீறி கல்லூரிக்கு வரும் மாணவிகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. 

மேலும், “இதனால், ஒவ்வொரு மாணவியும் கட்டாயம் பாய் ஃபிரண்ட் இருக்க வேண்டும் என்றும், மாணவிகளின் பாதுகாப்புக்காக இந்த முடிவு கல்லூரி நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு உள்ளது” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, “கல்லூரிக்குள் மாணவிகள் நுழையும் போது, சமீபத்தில் தனது பாய் ஃபிரண்டுடன் எடுத்தக்கொண்ட புகைப்படத்தை மாணவிகள் காட்ட வேண்டும்” என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்துள்ளது.

இப்படியாகப் பாய் ஃபிரண்டுடன் மாணவிகள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று, அச்சிடப்பட்ட அந்த கடிதமானது, ஆக்ராவில் உள்ள சென் ஜோன்ஸ் கல்லூரியின் பெயரில் அந்த மாநிலம் முழுவதும் தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த கடிதத்தைப் படித்த அந்த கல்லூரியைச் சேர்ந்த சிங்கிள் பாய்ஸ், சந்தோசத்தில் துள்ளிக் குதித்த நிலையில், இதனைப் பலரும் சேர் செய்தனர். ஆனால், அந்த கடிதம் போலியானது என்று, தற்போது தெரிய வந்தது. இதனால், துள்ளிக் குதித்த மாணவர்கள் எல்லாம் தற்போது, சோகத்துடன் காணப்படுவதாகவும், சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

அது நேரத்தில், கல்லூரியின் சார்பில் கடிதம் வெளியானது குறித்த பேசிய கல்லூரி முதல்வர் எஸ்.பி.சிங், “தங்களின் கல்லூரி இது மாதிரி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை” என்று, குறிப்பிட்டார்.

“எங்களின் கல்லூரியின் பெயரில் போலியான கடிதத்தை யாரோ பகிர்ந்து உள்ளனர் என்றும், இந்த வேலையை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்தார். 

அத்துடன், “மாணவர்கள் இந்த கடிதத்தைப் பகிரவேண்டாம் என்றும்” அவர் கேட்டுக்கொண்டார். 

அதே நேரத்தில், குறிப்பிட்ட அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் காதலி கிடைக்காத விரக்தியில் இந்த வேலையைப் பார்த்திருக்கக் கூடும் என்றும், கூறப்படுகிறது. இந்த சம்பவம், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.