நடிகர் அமீர்கானின் 3 வது திருமணத்துக்கு மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்.பி சுதிர் குப்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் சினிமாவில் மிக முக்கிய நாயகனாகவும், முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார் நடிகர் அமீர்கான். இந்தியில் அமீர்கானுக்கு என்று தனி ரசிகர்கள்  பட்டாளமே உண்டு. 

ஆனால், அதே நேரத்தில், நடிகர் அமீர்கான் ஏற்கனவே தனது முதல் மனைவி ரீனா தத்தாவை, கடந்த 2002 ஆம் ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்தார். இந்த முதல் மனைவிக்கு, ஜூனைத் என்ற மகனும், ஈரா என்ற மகளும் இருக்கிறார்கள்.

இதனையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டு “லகான்” இந்தி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரண் ராவை, அமீர்கான் 2 வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். 

பின்னர், இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், கணவன் - மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. 

இப்படியான கருத்துவேறுபாடுகள் அவர்களுக்குள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், 2 வது மனைவி கிரண்ராவையும் விவாகரத்து செய்து உள்ளதாக அவர் அறிவித்து உள்ளார். 

குறிப்பாக, நடிகர் அமீர்கான் தனது மனைவியின் பிரிவிற்கு “தங்கல்” படத்தில் அமீர்கான் மகளாக நடித்த “பாத்திமா சனா ஷேக்” தான் காரணம் என்றும், கிசுகிசுக்கப்படுகிறது.

முக்கியமாக, “பாத்திமா சனா ஷேக்கை, அமீர்கான் 3 வதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும்” மும்பையின் திரை உலகமான பாலிவுட் சினிமா உலகில் இந்த கிசுகிசுக்கள் தொடர்ந்து பரவி வருகிறது. 

பாலிவுட் சினிமா உலகில் உலா வரும் இந்த கிசுகிசுக்களை அவர்கள் இருவரும் இதுவரை மறுக்க வில்லை. 

தற்போது, நடிகர் அமீர்கானுக்கு 56 வயது ஆகிறது. ஆனால், இளம் நடிகை பாத்திமா சனா ஷேக்குக்கு தற்போது 29 வயது மட்டுமே ஆகிறது. இதனால், தனது வயதில், பாதிக்கு கீழ் வயது கொண்ட, அதுவும் மகள் வயது கொண்ட இளம் நடிகையை, தாத்தா வயதுகொண்ட மூத்த நடிகர் 3 வதாக திருமணம் செய்வதற்கு, பாலிவுட் திரை உலகில் பலரும் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் அமீர்கானின் 3 வது திருமணத்துக்கு மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி சுதிர் குப்தா, கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியபோது, “அமீர்கான் தனது முதல் மனைவியை 2 குழந்தைகளோடு கை விட்டார் என்றும், இப்போது 2 வது மனைவி கிரண் ராவையும் ஒரு குழந்தையோடு கை விட்டு இருக்கிறார்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

மேலும், “தாத்தாவாகும் வயதில், நடிகர் அமீர்கான் 3 வது மனைவியைத் தேடிக்கொண்டு இருக்கிறார்'” என்றும், அவர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

பாஜக எம்.பி சுதிர் குப்தா கருத்து, தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், நடிகர் அமீர்கான் ரசிகர்கள் அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.