வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று டெல்லியில் விவசாயிகள், டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் பேரணியில் ஈடுப்பட்டனர்.  


டெல்லியில் 12 மணிக்கு மேல் பேரணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் காவல்துறையினர் விவசாயிகள் மீது தடியடியும் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர்.


இந்த சூழலில் டெல்லி போராட்டத்தில் பங்கேற்ற 45 வயதான நவ்நீத் என்ற விவசாயி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது. பேரணியில் டிராக்டரை ஓட்டிச் சென்ற நவ்நீத் மீது காவல்துறையின் புல்லட் ஒன்று பாய்ந்ததால், டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்கிறார்கள் சக விவசாயிகள்.


ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறையினர், இறந்த நவ்நீத் டிராக்டரை அத்துமீறி ஓட்டியதில் தான் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என்கிறார்கள். 


போராட்ட களத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் விவசாயி நவ்நீத் மீது தேசியக்கொடியை போர்த்தி அவருக்கு போராட்டக் களத்திலேயே சக விவசாயிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.