வீட்டில் வேலை பார்த்து வந்த 38 வயது குடும்ப பெண்ணை, 81 வயது ரிடையர்ட் பேராசிரியர் தனது 60 வயதான நண்பரோடு சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் இருக்கும் லால்கட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான 60 வயதான சிவ் நாராயண் பாண்டே, அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இந்த 60 வயதான சிவ் நாராயண் பாண்டேவுக்கு, ரத்திபாத் எனும் கிராமத்தில் பண்ணை வீடு ஒன்று இருக்கிறது.

அங்கு, கடந்த 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை இரவு, அந்த பண்ணை வீட்டுக்கு இரவு விருந்துக்கு வருமாறு சிவ் நாராயண் பாண்டே, தனது நண்பரும் 81 வயதான ஓய்வு பெற்ற அரசுக் கல்லூரி பேராசிரியருமான தேவேந்திர பாண்டே என்பவரை அழைத்திருக்கிறார். 

நண்பனின் அழைப்பை ஏற்று, அதன் பேரில் 81 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியருமான தேவேந்திர பாண்டே இரவு விருந்துக்கு வந்திருக்கிறார். 

அப்போது, அந்த பண்ணை வீட்டில் அந்த பகுதியைச் சேர்ந்த 38 வயதாகும் குடும்ப பெண் ஒருவர், வீட்டு வேலை செய்துகொண்டு வந்திருக்கிறார். 

இப்படி, நீண்ட நாட்களாக அந்த பெண், அந்த வீட்டில் வேலை செய்து வந்த நிலையில், அன்றைய இரவு விருந்திற்காக வந்த, 60 வயதான தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டேவும், 81 வயதான ஓய்வு பெற்ற பேராசிரியருமான தேவேந்திர பாண்டேவும் மது அருந்திவிட்டு, அந்த 38 வயதான குடும்ப பெண்ணை இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் கணவர், தொழிலதிபர் நாராயண் பாண்டே நடத்தி வரும் செக்யூரிட்டி நிறுவனத்தில், செக்யூரிட்டியாக பணியாற்று வருகிறார். 

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணும், கடந்த 21 ஆண்டுகளாக அதே பண்ணை வீட்டில் வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார்.

மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த பெண், அந்த வீட்டில் ஒரு முறை குளித்துக் கொண்டிருந்த போது, நாராயண் பாண்டே அதை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு, அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். 

மேலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே, 60 வயதான சிவ் நாராயண் பாண்டே, மிரட்டி மிரட்டி பல முறை அந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன் உச்சக்கட்டமாகவே, தன்னுடைய நண்பரான ஓய்வு பெற்ற பேராசிரியருடன் சேர்ந்து, தனது வீட்டில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணை, அவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். 

இதனால், தனது நிலைமையின் விபரீதமானதை உணர்ந்த அந்த பெண், இது தொடர்பாக தனது கணவரிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அரசுக் கல்லூரியில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற 81 வயது தேவேந்திர பாண்டே, மற்றும் அவரை விருந்துக்கு அழைத்த 60 வயதான சிவ் நாராயண் பாண்டே ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.