உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து இளைஞன், மீண்டும் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் பாலியல் பலாத்கார சம்பங்களின் கூடாரமாக மாறி இருக்கிறது என்று விமர்சிக்கும் அளவுக்கு, அங்கு நாளுக்கு நாள் தொடர்ந்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பலாத்கார குற்றச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

உத்திரப் பிரதேச மாநிலம் சண்ட்கபிர் நகரில் 7 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த சிறுமி தனது வீட்டில் இருந்து வந்தார்.

அப்போது, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, கடந்த 4 ஆம் தேதி அந்த சிறுமி மாயமானர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால், சிறுமி எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பயந்து போன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். அத்துடன், இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மாயமான சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால், அதனை கொலை வழக்கமாக மாற்றிய போலீசார் விசாரணையைத் துரிதப் படுத்தினர்.

அப்போது, சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

அதன் படி, போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீசார் நேற்றைய தினம் கைது செய்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அந்த நபர் அந்த 7 வயது சிறுமியை, ஆசை வார்த்தைகள் கூறி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது” உறுதி செய்யப்பட்டது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை, அந்த நபர் ஒப்புக்கொண்டார் எனவும், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், ஏற்கனவே ஒரு சிறுவனை இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி, தற்போது தான் அவன் ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், நாகையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு சிறுவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.