ஆசிரமத்திற்கு வந்த 4 பெண்கள் மீது ஆசைப்பட்ட சாமியார் ஒருவர், அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் தபஸ்வி பகுதியில் ஷைலேந்திர மேத்தா என்ற நபர், ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். 

இவரது ஆசிரமத்திற்கு அந்த பகுதியிலிருந்து பல்வேறு பெண்கள் வந்து அந்த சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

இப்படியான நிலையில், ராஜாஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், குறிப்பிட்ட அந்த சாமியிடம் அடிக்கடி வந்து ஆசி பெற்றும், அங்கேயே தங்கிச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். 

அப்படியாக, அந்த பெண்கள் அங்கு அடிக்கடி வந்ததால், அந்த ஆசிரமத்தில் உள்ள சாமியார் சைலேந்திர மேத்தா, அந்த பெண்கள் மீது சபலப்பட்டதாகத் தெரிகிறது. இந்த பெண்கள் மட்டுமல்லாது, அந்த ஆசிரமத்திற்கு வரும் மற்ற பெண்கள் மீதும் அந்த சாமியார் சைலேந்திர மேத்தா, சபலப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாமியார் சைலேந்திர மேத்தா மீது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அந்த 4 பெண்களில் 3 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளனர். 

இந்த பாலியல் பலாத்காரம் தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களும் புகார் அளித்து உள்ளனர்.

மேலும், இந்த 3 பெண்கள் மட்டுமல்லாது, மற்றொரு பெண்ணும், சம்மந்தப்பட்ட சாமியார் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் அனைவரும், “சம்மந்தப்பட்ட அந்த ஆசிரமத்திற்குப் பல முறை வந்து சென்று இருக்கிறார்கள். அப்போது, மிகவும் நல்ல முறையில் அந்த பெண்களிடம் நடந்த கொண்ட அந்த சாமியார், திடீரென இப்படி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

அத்துடன், “அந்த சாமியார், பெண்கள் சேவை என்கிற பெயரில், ஓரிரு நாட்கள் பெண்களை ஆசிரமத்திலே தங்க வைப்பார் என்றும், அப்போது தான் அந்த பெண்களை மாற்றி மாற்றி அந்த சாமியார் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 

இப்படியாக, அந்த சாமியார் பலாத்காரம் செய்த கொடுமையை, அவர்கள் கடந்த 6 ஆம் தேதி வியாழக் கிழமை அங்குள்ள காவல் நிலையத்தில் புகாராக அளித்திருக்கிறார்கள். 

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணை, அவரின் தந்தை அந்த ஆசிரமத்திற்கு அழைத்த போது, அந்த பெண் வர மறுத்து விட்டார். 

அப்போது, அந்த பெண்ணிடம் விசாரித்த போது, அந்த பெண்ணையும் அந்த சாமியார் விட்டு வைக்கவில்லை என்றும், அந்த பெண்ணையும் சம்மந்தப்பட்ட சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப் படுத்தியதும்” வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட சாமியார் மற்றும் அந்த ஆசிரமத்தின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.