17 வயது விதவை பெண்ணை கடத்திய 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் டும்கா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், இந்த பெண்ணுக்கு ஒரு அழகான குழந்தையும் பிறந்தது.

இப்படியாக, அந்த பெண்ணின் வாழ்க்கை ஏழ்மையிலும் மிக அழகாக சென்றுகொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இவரது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கி உள்ளது.

அதன் படி, அந்த பெண்ணின் கணவன் கடந்த ஆண்டு திடீரென்று உயிரிழந்து விட்டார். இதனால், கணவன் இல்லாமல் தனது குழந்தையை இந்த ஏழ்மை நிலையிலும் தினமும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்திருக்கிறார் இந்த 17 வயதான இளம் பெண். 

அதே நேரத்தில், ஏழ்மையின் காரணமாக, இந்த பெண்ணின் வீட்டில் கழிப்பறை வசதி கூட கிடையாது. இதன் காரணமாக, அதிகாலை நேரத்திலும் அல்லது மாலை இரவு ஆன பிறகும், அந்த ஊரின் ஒதுக்குப் புறமான ஆற்றங்கரையோரம் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்வதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்து உள்ளார்.

அப்போது, அந்த பெண் தினமும் இரவு நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்வதை, அந்த பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் நோட்டமிட்டு உள்ளனர். இவர்கள், வேலைக்குச் செல்லாம் அந்த பகுதியில் ஊர் சுற்றித் திரிந்துகொண்டிருந்திருந்து உள்ளனர்.

இதனையடுத்து, இப்படி தினமும் அந்த பகுதியில் இயற்கை உபாதையைக் கழிக்க வரும் அந்த பெண்ணை நோட்ட மிட்டு, அந்த பெண்ணை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று, அந்த இளைஞர்கள் 4 பேர் கூட்டாகச் சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர்.

அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த 12 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று மாலை நேரத்தில் அந்த விதவை பெண், இயற்கை உபாதை கழிக்கச் சென்றிருக்கிறார். 

அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த இரு இளைஞர்கள் அந்த பெண்ணின் வாயை மூடி, அந்த பெண்ணை தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று உள்ளனர்.

அத்துடன், அந்த இளம் விதவை பெண்ணை அங்குள்ள ஷிகரிபரா மற்றும் கதிகுண்டின் எல்லையில் இருக்கும் ஒரு ஆற்றின் அருகில் கடத்திச் சென்று, அங்கு வைத்து அந்த பெண்ணை கூட்டாளிகள் 4 பேருமாக நேர்ந்து வெறித் தீர மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இந்த பாலியல் பலாத்காரத்தில் அந்த 4 பேரும் சற்று அசந்து போன நேரம் பார்த்து, அங்கிருந்து தப்பிச் சென்ற அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்திற்கு எப்படியோ சென்று, தனக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம் பற்றி கண்ணீர் மல்க கூறி புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட இளைஞர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த தீவிர தேடுதல் வேட்டையில், ராஜு கெவத், சுனில் மற்றும் ரஞ்சித் கெவாட் ஆகிய 3 குற்றவாளிகளையும் போலீசார் தற்போது கைது செய்து உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 வது  குற்றவாளி சந்தீப் கெவத்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஜார்க்கண்டில் 17 வயது விதவை பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.