திருமணம் செய்துகொள்வதாக 37 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி, உல்லாசம் அனுபவித்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர், அங்குள்ள தண்டோலியில் செயல்பட்டு வரும் ஒரு ஹோட்டலுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பணி விசயமாக ஒரு நேர்காணலுக்குச் சென்று உள்ளார்.

அப்போது, அந்த ஹோட்டலில் மேனேஜராக பங்கஜ் பாட்டில் என்பவர் பணியாற்றி வந்தார்.

அந்த நேரத்தில், வேலைக்கு நேர்காணுக்கு வந்த குறிப்பிட்ட அந்த 37 வயது பெண்ணிடம், மேனேஜரான பங்கஜ் பாட்டில் நேர்காணல் செய்தார். அப்போது, அந்த பெண்ணைப் பற்றிய எல்லா விபரங்களையும், அவர் கேட்டு தெரிந்து வைத்துக்கொண்டார்.

இதனையடுத்து, அந்த பெண்ணிடம், “உங்களை நானே திருமணம் செய்துகொள்கிறேன்” என்று, ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, அந்த பெண்ணை நம்ப வைத்திருக்கிறார்.

அதே நேரத்தில், மேனேஜரான பங்கஜ் பாட்டில் ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிந்தும், அந்த பெண் மேனேஜரான பங்கஜ் பாட்டிலோடு நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். இந்த பழக்கம் நாளுக்கு நாள் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கவே, அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினார். 

இதனையடுத்து, அவர்கள் நினைக்கும் போதெல்லாம் உல்லாசம் அனுபவித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, அந்த பெண்ணோடு உல்லாசமாக இருப்பதை, அந்த பெண்ணுக்கேத் தெரியாமல் மேனேஜரான பங்கஜ் பாட்டில் ரகசியமாக வீடியோ எடுத்துக்கொண்டு உள்ளார். 

குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு, அந்த பெண்ணிடம் “நான் இதே போலவே தனியாக ஹோட்டல் தொடங்க வேண்டும்” என்று கூறி, அந்த பெண்ணிடம் பணம் கேட்டு பெற்றிருக்கிறார்.

அந்த பெண்ணும், நாம் தான் இவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறோமே என்ற எண்ணத்திலேயே, அவர் கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்திருக்கிறார்.

அவர் அடிக்கடி அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றியே இவ்வளவு பணத்தையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். இப்படியாக, அடிக்கடி அவர் பணம் கேட்கவே, அந்த பெண் ஒரு கட்டத்திற்குப் பிறகு பணம் கொடுப்பதை நிறுத்தியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, தான் அந்த பெண்ணுடன் உல்லாசமாக அனுபவிக்கும் வீடியோ காட்டி, அந்த பெண்ணை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்.

இப்படியாக, அந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டியே கடந்த 2 வருடங்களில் 33 லட்ச ரூபாய் வரை பணமும், தங்க நகைகளும் வாங்கியதாகக் கூறப்படுகிறது. 

அந்த பெண்ணிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் எல்லாம் தீர்ந்த பிறகு, அவரிடமிருந்து அந்த நபர் விலகத் தொடங்கி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நபர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டியே பணம் பறித்த பாட்டீலையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரின் மனைவியையும் அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.