பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிஸ்கட், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட அடிப்படை பொருட்களின் விலை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு அடிப்படை பொருட்களின் விலைகள் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது உயர்ந்திருக்கிறது.

இந்த சூழலில் தான், நாட்டில் எரிபொருள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வரை புதிய உச்சத்தில் உயர்ந்திருக்கிறது.

இந்த சூழலில், இந்தியாவில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன் படி, பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை பொருட்களை தயாரித்து வரும் ஐடிசி, இந்துஸ்தான் யுனிலிவர், பார்லே உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது நிறுவன தயாரிப்புகளின் பொருட்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்து உள்ளன. 
அதில், இந்துஸ்தானி யூனி லிவர் தனது நிறுவனத்தின் தயாரிப்பான சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களுக்கு 12 சதவீதம் வரை விலை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. 

அதே போல், பார்லே பிஸ்கட் நிறுவனமபனது, “பிஸ்கட்டுகள் விலையை 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்த்த” உள்ளதாகவும் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

பிரிட்டானியா நிறுவனமானது, “7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விலையை  உயர்த்த உள்ளதாகவும், இவற்றுடன் மேலும் பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளான “நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அழகு சாதன பொருட்கள் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதே போல், லக்ஸ் உள்ளிட்ட சோப்பு மற்றும் சேம்புகளின் விலை 10 சதவீதம் அளவுக்கு விரை உயர்த்தப்படுகிறது. 19 மில்லி அளவு கொண்ட கம்போர்ட் கண்டிஷனர் விலையானது 33 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக, நாட்டில் அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலை காரணமாக போக்குவரத்து செலவுகளும் அதிகரித்து உள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயரத் தொடங்கி உள்ளது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.