மதத்தின் பெயரைச் சொல்லிய பழகிய ஃபேஸ்புக் நண்பன், வேலை வாங்கித் தருவதாக உல்லாசம் அனுபவித்து விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. 

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர், அந்த பகுதியில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த இளம் பெண், பல நேரங்களில் ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தான் அதிக நேரத்தை இவர் செலவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

அப்படி அவர் அதிக நேரம் ஃபேஸ்புக்கில் இருந்த போது, இளைஞர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.

அப்போது, அந்த இளைஞர் “என் பெயர் ஆரி.ப் என்றும், நான் இங்குள்ள ரே பரேலியைச் சேர்ந்தவன்” என்றும், அந்த பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு உள்ளார்.

அத்துடன், “அந்த இளம் பெண்ணின் மதத்தைக் குறிப்பிட்டு, நானும் அந்த மாதம் தான்” என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இந்த அத்தனை பொய்களையும் நம்பிய அந்த இளம் பெண், குறிப்பிட்ட இந்த இளைஞனுடன் நம்பி நன்றாக பழகி வந்துள்ளார். 

இந்த பழக்கம் அவர்களுக்குள், மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த இளம் பெண் தன்னைப் பற்றி எல்லா விசயங்களையும், அந்த இளைஞனை நம்பி கூறியிருக்கிறார்.

குறிப்பாக, “உங்களுக்கு நான் நல்ல வேலை ஒன்று வாங்கித் தருகிறேன்” என்றும் கூறி, அந்த இளம் பெண்ணின் நம்பிக்கையை இன்னும் அதிகம் பெற்றிருக்கிறார்.

இதை எல்லாம் உண்மை என்று நம்பிய அந்த பெண், அந்த இளைஞனின் ஆசை வலையில் விழுந்து, அந்த இளைஞனின் ஆசையைப் பூர்த்தி செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன்படி, அந்த இளம் பெண்ணை அந்த பகுதியில் உள்ள ஒரு தனிமையான இடத்திற்கு வரச் சொல்லி, அந்த பெண்ணை அங்கு வைத்து, அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

பாலியல் பலாத்காரம் எல்லாம் செய்து முடித்தப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அந்த இளைஞனிடமிருந்து அதன் பிறகு, அந்த இளம் பெண்ணை அவன் தொர்பு கொள்ளவில்லை என்று தெரிகிறது. அந்த இளைஞன், அந்த இளம் பெண்ணிடம் பேசுவதையே நிறுத்திவிட்டான். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 21 வயதான இளம் பெண், சம்மந்தப்பட்ட நபரைப் பற்றி விசாரித்து உள்ளார். அப்போது, “அந்த நபர், வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பது” தெரிய வந்தது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்துள்ளார் அந்த பெண். 

இதனையடுத்து, அந்த இளைஞனை சந்தித்துப் பேசிய அந்த பெண், “தன்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது பற்றியும், மதத்தைப் பற்றி தன்னிடம் பொய்யாகக் கூறி அறிமுகம் ஆனது பற்றியும்” கேட்டுள்ளார். 

இதற்கு, அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக அந்த இளைஞன் மிரட்டி உள்ளான். இதனால், பயந்து போன அந்த பெண், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அந்த இளைஞரை விசாரித்து அனைத்து தகவல்களையும் சேகரித்து உள்ளனர். அத்துடன், தலைமறைவாக உள்ள அந்த இளைஞரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.