கள்ளக் காதல் விவகாரத்தில் 2 மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாகத் தந்தை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், “உண்மையில் குழந்தையைக் கொன்றது தாயா? தந்தையா?” என்று சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ள கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புர்பா பர்தமான் மாவட்டத்தில் அமைந்து உள்ள கலர்பூல் கிராமத்தில், சரவணன் - அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

இப்படியான சூழலில், கணவன் சரவணன், அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் கள்ளக் காதல் இன்பத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அவரது மனைவி அமுதா, தனது கணவன் சரவணனைப் பல முறை எச்சரித்து, கண்டித்து உள்ளார். ஆனால், இதனைப் பொருட்படுத்தாத சரவணன், கள்ளக் காதலைக் கைவிட மறுத்துவிட்டு, தொடர்ந்து கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில், சரவணன் - அமுதா தம்பதிகளின் இரு மகள்களும், வீட்டு வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, சகோதரிகள் இருவரும் அலறல் சத்தம் கேட்டு உள்ளது. இதனால், பயந்து போன சிறுமிகளின் பாட்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். 

அப்போது, சிறுமிகள் இருவரும் அங்கு அறுந்து கிடந்த மின்சார வயர் மீது கால் வைத்து, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது, வீட்டிற்குள் தாயும், தந்தையும் இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர், அங்கு கிராம மக்களே திரண்டு வந்தனர். பிறகு, அங்கு வந்த சிறுமிகளின் தாய் அமுதா, “என் மகள் மின்சார வயரை தெரியாமல் மிதிக்கவில்லை என்றும்? வேண்டுமென்றே அவர்கள் திட்டமிட்ட கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்” தனது கணவர் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, “என்னுடைய கணவர் சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக் காதல் இருந்ததாகவும், அதனை கை விடுமாறு நான் பல முறை சொல்லியும், அவர் அதனை கேட்கவில்லை என்றும், தற்போது மகள்கள் தனது கள்ளக் காதலுக்குத் தொந்தரவாக இருப்பதாகவும் கருதி, பெற்ற மகள்கள் என்றும் பார்க்காமல், என் கணவர் கொலை செய்திருக்கலாம்” என்றும் கூறி, அவர் மனைவி அமுதா குற்றம்சாட்டியிருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து, சிறுமிகளின் தந்தை சரவணன், அங்கு வந்திருக்கிறார். இதனால், கடும் ஆத்திரத்தில் இருந்த கிராம மக்கள், அவரை தர்ம அடி அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடபாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சரவணன், “என்னுடைய மனைவி, என்னை வேண்டுமென்றே சிக்க வைத்திருப்பதாக” அவர் கூறி அழுது உள்ளார். 

அத்துடன், “இதனை நான் செய்ய வில்லை” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

இதனால், “மகள்களைக் கொலை செய்தது தாயா? தந்தையா? என்று போலீசார் குழப்பத்தில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 

எனினும், இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு  வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் 
ஏற்படுத்தி உள்ளது.