ரயில் கழிவறையில் வைத்து, 19 வயது இளைஞன் ஒருவன் சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

குறிப்பாக, இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிக அளவிலான பாலியல் பலாத்கார குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் சென்றுகொண்டிருந்த கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில் ஓடிக்கொண்டு இருக்கும் பொது, ஒரு கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், 19 வயதான இளைஞன் ஒருவன், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று உள்ளான்.

அப்போது, அந்த ரயில் வேகமாக சென்றுகொண்டிருந்த போது, அந்த சிறுமியை அந்த ரயிலின் கழிப்பறைக்குள் அழைத்துச் சென்ற அந்த இளைஞன், அங்கு வைத்தே அந்த சிறுமியைத் தாக்கி, அவன் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து, காம வெறி தீர்ந்த பிறகு அந்த சிறுமியை அவன் விடுவித்து உள்ளான். இதனால், அந்த சிறுமி நடக்க முடியாமல் அழுதுகொண்டே இருந்துள்ளார். அப்போது, ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தில் அந்த ரயில் வந்து நின்ற போது, அந்த சிறுமி அங்கிருந்து இறங்கி அங்குள்ள போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

இந்த பாலியல் பலாத்கார வழக்கு குறித்து பேசிய தானே காவல் துறை அதிகாரிகள், “19 வயது இளைஞனும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியும் ஒன்றாக அந்த ரயிலில் பயணித்து உள்ளனர். 

அப்போது, அந்த சிறுமியை அந்த ரயிலின் கழிவறைக்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞன், அங்கு வைத்தேன் அந்த சிறுமியை அவன் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். 

பாதிக்கப்பட்ட சிறுமி, மும்பையில் உள்ள குரார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அந்த காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞனைக் கைது செய்து, தற்போது எங்களிடம் ஒப்படைத்து உள்ளனர். 

இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து, சம்மந்தப்பட்ட அந்த இளைஞரிடம் தொடர்ந்து நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்” என்றும், விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, ஓடும் ரயிலில் உள்ள கழிவறையில் வைத்து, 19 வயது இளைஞன் ஒருவன், சிறுமியைப் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.