பணக்கார பெண்ணை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்த ஏழை காதலனால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள பாம்னியா கிராமத்தில் 17 வயதான இளைஞன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், தவறான நண்பர்களின் தூண்டுதலின் பேரில் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து சீக்கிரமே பணக்காரன் ஆக திட்டமிட்டு உள்ளான்.

அதன் படி, அதே பகுதியைச் சேர்ந்த பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த 16 வயதான சிறுமியை காதலித்து வந்திருக்கிறார் அந்த ஏழை இளைஞன். அந்த இளைஞனின் காதல் உண்மை என்று நம்பிய அந்த சிறுமி, அடுத்த சில நாட்களில் அந்த ஏழை இளைஞனின் காதல் வலையில் விழுந்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பணக்கார வீட்டு சிறுமியும், அந்த இளைஞனை காதலிக்கத் தொடங்கி இருக்கிறார். இதனால், அந்த இளைஞன், அந்த பணக்கார வீட்டு 
சிறுமியை காதலிப்பது போல் நடித்து, அவரை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக புதிய திட்டம் போட்ட அந்த இளைஞன், பணக்கார காதலியிடம் இருந்து பணம் பறிக்க நோக்கத்தில், அந்த சிறுமியிடம் ஆசை ஆசையாகப் பேசி தொடர்ந்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை, அந்த சிறுமிக்குத் தெரியாமல், தனது செல்போனில் ரகசியாக வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு உள்ளார்.

பின்னர், தனது பணக்கார காதலியை நேரடியாக மிரட்டத் தொடங்கிய அந்த காதலன்,  அந்த ஆபாச வீடியோக்களை காட்டி, “இந்த படத்தை எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கு  16 லட்சம் ரூபாய் பணம் வேண்டும்” என்று, கேட்டு மிரட்டி இருக்கிறார். 

காதலனின் இந்த மிரட்டல் மற்றும் அந்த ஆபாசப் படங்களை எல்லாம் பார்த்த அந்த பணக்கார சிறுமி, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

அதன் பிறகு, தனது மானத்திற்கும், குடும்பத்திற்கும் பயந்த அந்த பெண், தனது காதலன் கேட்டபடி, தனது வீட்டிலிருந்து 16 லட்ச ரூபாய் பணத்தைத் திருடி எடுத்து வந்து, தனது காதலனிடம் கொடுத்திருக்கிறார்.

இந்த 16 லட்சம் ரூபாய் பணத்தையும் பெற்றுக்கொண்ட அந்த காதலன், மேலும் மேலும் பணம் கேட்டு, அந்த பெண்ணை மிரட்டி ப்ளாக் மெயில் செய்யத் 
தொடங்கியிருக்கிறான்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பணக்கார சிறுமி, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.

அதே நேரத்தில், வீட்டில் இருந்த பணம் முற்றிலுமாக குறைந்திருப்பதை, சிறுமியின் பெற்றோர் கண்டுபிடித்து, சிறுமி மீது சந்தேகப்பட்டு, அவரை கண்காணிக்கவும் செய்து உள்ளனர்.

அப்போது, அந்த சிறுமி மீண்டும் வீட்டில் உள்ள பணத்தை எடுக்க முயன்ற போது, பெற்றோரிடம் வசமாக மாட்டிக்கொண்டார். இது தொடர்பாக, அந்த சிறுமியிடம் பெற்றோர்கள் தீவிரமாக விசாரித்து உள்ளனர்.

அப்போது, “தன்னுடைய காதலன் பலாத்காரம் செய்து, என்னை ப்ளாக் மெயில் செய்து, பணம் கேட்டு மிரட்டுவதை” கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்மந்தப்பட்ட இளைஞன் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.