ராஜஸ்தான் மாநிலத்தில் வாய் பேச முடியாத காது கேளாத 17 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. தினம் தினம் நாட்டின் எதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் உள்ளன.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 17 வயது சிறுமி ஒருவர், நேற்று காலை காலை 11 மணி அளவில் அவருடைய வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்று உள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட ஒரு கும்பல், அந்த சிறுமியை கடத்திச் சென்று உள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சிறுமியை கடத்திய அந்த 5 பேர் கொண்ட கும்பல், கொஞ்சம் கூட இறக்கம் இல்லாமல் அந்த சிறுமியை நாசம் செய்து உள்ளனர்.

அந்த சிறுமி எவ்வளவோது துடித்தும், அழுதும் தன் ஊமை பாசையால் அந்த மிரக கும்பலிடம் தனக்கே உண்டான பாசையில் கெஞ்சி உள்ளார். ஆனால், துளி கூட இறக்காம் இல்லாத அந்த மிருக கூட்டம், அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

காம வெறி எல்லாம் தீர்ந்து போன பிறகு, அந்த மிருக கும்பல், மாலை 5 மணி அளவில் அந்த சிறுமியின் ஊரிலேயே கொண்டு வந்து போட்டு விட்டு, தப்பிச் 
சென்றுள்ளனர்.  

இதனால், பயந்துப் போன அந்த சிறுமி வீடு திரும்பி உள்ளார். ஆனால், வீட்டில் ஒரு வித பயத்துடனே இருந்துள்ளார். யாரிடமும் இது பற்றி எதுவும் கூற வில்லை. இப்படியே, அடுத்த 3 நாட்கள் சென்றுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 3 நாட்களுக்குப் பிறகு தான், அந்த சிறுமியின் தாயாருக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

குறிப்பாக, சிறுமியால் வாய் பேச முடியாத நிலையில், அவருடைய உடல் உபாதைகளாலேயே இது குறித்து சிறுமியின் தாய்க்குத் தெரிய வந்து உள்ளது. 

இதனையடுத்து, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி குறிப்பிட்ட அடையாளங்களை வைத்து, காம வெறிபிடித்த அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரில்  3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன், தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

எனினும், சிறுமிக்கு ஓரளவுக்கு மட்டுமே காயங்கள் இருப்பதாகவும், அதிக அளவிலான காயங்கள் இல்லை என்றும், மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, வாய் பேச முடியாத காது கேளாத 17 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.