பக்கத்து வீட்டு பெண்ணால் உணவில் மயக்க மருந்து கலந்துகொடுத்து 16 வயது சிறுமி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் ஜுண்ட் மாவட்டம் ஹர்ஹீ கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்த சிறுமி, அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த சூழலில் தான், அந்த 11 ஆம் வகுப்பு சிறுமி தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வசித்து வரும் ஒரு பெண்ணை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த பெண் தனது வீட்டில் வைத்து மயக்க மருந்து கலந்த உணவை அந்த 16 வயது சிறுமிக்கு சாப்பிட கொடுத்து உள்ளார். 

அந்த உணவை வாங்கி சாப்பிட்ட அந்த சிறுமி, அடுத்த சிறுதி நேரத்தில் அங்கேயே மயக்கி உள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண் தனது ஆண் கூட்டாளிகளுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அதன்படி, அந்த பெண்ணின் ஆண் கூட்டாளிகள் இருவரும் அங்கு வந்த நிலையில், மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமியை அங்கேயே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

அத்துடன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை, அவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துக்கொண்டனர்.

இதனையடுத்து, அந்த சிறுமி மயக்கத்தில் இருந்து எழுந்த நிலையில், அந்த வீடியோவை காட்டி மிரட்டிய அவர்கள், “இந்த பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது” என்று, எச்சரித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனக்கு நடந்த கொடூரத்தை யாரிடமும் தெரிவிக்காமல் பயத்தில் இருந்து உள்ளார். 

மேலும், “பணம் தரவில்லை என்றால், இந்த பாலியல் பலாத்கார வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டு உன் மானத்தை வாங்கி விடுவோம்” என்று, அவர்கள் தொடர்ந்து மிரட்டி உள்ளனர். 

இதனால், அவர்களின் மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி, தொடர்ந்து அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து வந்திருக்கிறார்.

ஆனால், அந்த கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துகொண்டே இருந்ததால், ஒரு கட்டத்திற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லும் அந்த பெண்ணால் பணத்தை தர முடியவில்லை. ஆனாலும், அந்த கும்பல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாலும், வேறு வழி தெரியாமல் அந்த சிறுமி தனக்கு நடத்த பாலியல் பாலத்கார விசயத்தைப் பற்றி, 5 மாதங்களுக்கு பிறகு வீட்டில் தனது அம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், உடனடியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 16 வயதான சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

குறிப்பாக, அந்த சிறுமிக்கு உணவில் மயக்க மருந்து கலந்துகொடுத்த பக்கத்து வீட்டு பெண்ணையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 3 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவர்கள் 3 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.