15 வயது சிறுமியை கடந்த 9 மாதங்களாக 2 சிறுவர்கள் உள்பட 33 பேர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் பெரம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் தோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர், தனது அத்தையுடன் வசித்து வந்தார்.

அந்த சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த நிலையில், கொரோனா விடுமுறை காரணமாக, அவர் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த சூழலில், சிறுமியின் அத்தை பகலில் வேலைக்கு சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில் தான், இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது கடந்த ஜனவரி மாத்தில், அந்த சிறுமியின் நண்பர்கள் சிலர், ஆசை வார்த்தைகள் கூறி, அவரை கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

அத்துடன், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை, அந்த கும்பல் தங்களது செல்போனில் வீடியோவாகவும் படம் பிடித்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டி காட்டியே சிறுமியை மிரட்டி வந்த அந்த கொடூர கும்பல், அந்த சிறுமியை பயமுறுத்தியே, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

மேலும், கொடூரத்தின் உச்சமாக, சிறுமியின் இந்த ஆபாச வீடியோக்களை, அவர்களது மற்ற நண்பர்களுக்கும் அவர்கள் அனுப்பி வைத்து உள்ளனர். இதனைப் பார்த்த அந்த கும்பலின் கூட்டாளிகள், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மீது சபலம் அடைந்து, அவர்கள் அந்த சிறுமியை மிரட்டி, தொடர்ச்சியாக பல முறை பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இந்த 2 மாத காலத்தில் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 33 பேர் அந்த சிறுமியை கசக்கிப் பிழிந்து நாசம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த கொடூர கும்பலின் பாலியல் வெறியாட்டம் எல்லை மீறி போகவே, இந்த வலிகளை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறுமி, இது குறித்து தன்னுடைய அத்தையிடம் கூறி அழுது உள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் அத்தை, இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக கடந்த 23 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த குற்றவாளிகள் 33 பேரையும் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.