அழகு நிலையத்தில் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்ட 15 வயது சிறுமியை, ஆண்கள் - பெண்கள் என பலரும் 3 மாதமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, குலை நடுங்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது, நெஞ்சைப் பதைபதைக்கச் செய்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் தான், இப்படி குலை நடுங்கும் கொடூர குற்றம் அரங்கேறி உள்ளது. 

மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் என்னும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாரணாசியில் உள்ள ராம்நகர் 
பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்திற்கு, கடந்த ஜூன் மாதம் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  

அந்த 15 வயது சிறுமி வேலைக்குச் சேர்ந்தது முதல், அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர் சிறுமிக்கு போதைப் பொருட்கள் மற்றும் இன்னும் பிற மாத்திரைகளைக் கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

சிறுமிக்கு 15 வயது மட்டுமே நடப்பதால், சிறுமியை வைத்து தாம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணிய அந்த அழகு நிலையத்தின் உரிமையாளர், அங்குள்ள ஒரு வீட்டில் சில நாட்கள் அடைத்து வைத்து, முதலில் அவரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், தன்னுடைய அழகு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளரிடம், தன்னிடம் 15 வயது சிறுமி இருப்பதாகக் கூறி, கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி, அந்த சிறுமியை நாசம் செய்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக, அந்த அழகு நிலையத்திற்கு வரும் 
ஆண்கள் - பெண்கள் என பலரும், அந்த 15 வயது சிறுமியை 3 மாதமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

இப்படி, கடந்த 3 மாதத்தில் பலரின் பாலியல் சித்ரவதைகளைத் தாங்கிக்கொண்ட அந்த சிறுமி, அங்கிருந்து கடந்த 16 ஆம் தேதி எப்படியோ தப்பித்து வெளியே வந்துள்ளார். இதனையடுத்து, அங்குள்ள காவல் நிலையத்திற்குச் சென்று, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுமைகள் குறித்துக் கூறி, அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். பின்னர், தனக்கு நேர்ந்த பாலியல் அவலங்கள் குறித்து, சிறுமி புகாராக அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த அங்குள்ள ராம் நகர் போலீசார், சுனார் பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அந்த சிறுமி, சுனார் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்மந்தப்பட்ட நபர்களைத் தேடி வருகின்றனர்.

சிறுமியை தப்பிச் சென்ற மறுநிமிடமே, சிறுமியை துன்புறுத்திய அனைவரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இதனால், அந்த பாலியல் பலாத்கார கும்பலைப் பிடிக்க தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு பாலியல் பலாத்கார குற்றங்கள் மற்றும் கொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.