மேற்கு வங்கத்தில் 14 வயது சிறுமிக்கேத் தெரியாமல் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

இதனிடையே, பள்ளி முடிந்த மாலை நேரத்தில் தனது சக நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள பூங்காவில், அந்த 13 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர், குளிர்பானத்தில் எதையோ கலந்து, அந்த 13 வயது சிறுமியிடம் குடிக்கக் கொடுத்து உள்ளார். சிறுமியும், அதனைக் குடித்த போத, அடுத்த சில நிமிடங்களில் அங்கேயே மயங்கி உள்ளார்.

அப்போது, அந்த சிறுமியை அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்ற மர்ம நபர் ஒருவர், அந்த சிறுமியை அவருக்கேத் தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து, மயக்கம் தெளிந்த நிலையில், கண் விழித்துப் பார்த்த சிறுமி, தான் அணிந்திருந்த ஆடையில் ரத்தக் கறை இருப்பதைப் பார்த்துள்ளார். அத்துடன், மயக்க நிலையில் என்ன நடந்தது என்று கூட சிறுமிக்குத் தெரியவில்லை. 

எனினும், “இந்த ரத்தக் கரை பற்றி வீட்டில் சொன்னால் பெற்றோர் பயப்படுவார்கள்” என்று நினைத்த அந்த சிறுமி, இது பற்றி தன் பெற்றோரிடம் எதுவும் கூறாமல் மறைத்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதனைச் சிறுமி கவனித்துள்ளார். ஆனாலும், இது பற்றியும் சிறுமி தன் பெற்றோரிடம் கூறாமல் மறைத்துவிட்டார். 

கடந்த  சில மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனாலும், இந்த வழக்கில் குற்றவாளியை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 14 வயது ஆகிறது. அத்துடன் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி மிகச் சரியாக 10 மாதங்கள் ஆவதால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

எனினும், புதிதாகப் பிறந்த குழந்தையை அந்த சிறுமி வாங்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதே போல், சிறுமியின் பெற்றோரும் சொந்த பந்தம் மற்றும் சமூக காரணங்களைக் குறிப்பிட்டு, அந்த குழந்தையை வாங்கவும், பராமரிக்கவும் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சிறுமிக்குப் பிறந்த அந்த குழந்தையானது, அந்த பகுதியில் உள்ள அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த செய்தி, தற்போது இணையத்தில் பரவி வருகிறது. யாரோ ஒருவர் செய்யும் தவறால், தற்போது அந்த குழந்தையின் எதிர்காலமும், அந்த சிறுமியின் எதிர்காலமும் கேள்வி குறியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.