தோழியை பார்க்கச் சென்ற 13 வயது சிறுமியை, 5 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 2 ரயில்வே ஊழியர்கள் பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செஞ்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர், அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், கடந்த வாரம் “தனது தோழியைச் சந்திக்கச் செல்வதாக” தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, தனியாக அங்குள்ள ரயில் நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு வந்து உள்ளார்.

அங்கு, நீண்ட நேரம் ஆகியும் அந்த சிறுமியின் தோழி அங்கு வராத நிலையில், இரவு நேரத்தில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு, வேறு வழியில்லாமல் தனது வீட்டிற்குத் திரும்ப அந்த 13 வயது சிறுமி முடிவு செய்து, நடக்கத் தொடங்கி உள்ளார்.

அப்போது, அந்த சிறுமியின் பின்னாடியே வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், அந்த சிறுமியிடம் பேச்சு கொடுத்திருக்கிறார்.

அப்போது, அந்த சிறுமி அப்பாவியாக “எனது தோழியின் வீட்டிற்கு செல்ல வந்தேன். ஆனால், அவர் வரவில்லை. அதனால், நான் என் வீட்டிற்கு திரும்பிச் செல்கிறேன்” என்று, அவரிடம் உண்மையைக் கூறியிருக்கிறார்.

அந்த சிறுமியின் நிலையைத் தெரிந்துகொண்ட அந்த ஆட்டோ ஓட்டனர், சிறுமியிடம் “உங்களை நானே உங்கள் வீட்டில் விட்டுவிடுகிறேன். இந்த நேரத்தில் நீங்கள் தனியக செல்வது நல்லது இல்லை” என்று, அறிவுரை கூறி விட்டு, அந்த சிறுமியை தனது ஆட்டோவில் ஏற்றிருக்கிறார்.

அதன் பிறகு, அந்த சிறுமி தனது ஆட்டோவில் கடத்திச் சென்ற அந்த டிரைவர், அந்த சிறுமியை அங்குள்ள ஒரு இடத்தில் அடைத்து வைத்து அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ரயில்வே ஊழியர்களும் அங்கு வந்து அந்த சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்து உள்ளனர்.

குறிப்பாக, அந்த சிறுமியை அந்த பகுதியின் பல இடங்களுக்குக் கடத்தி சென்று, 2 நாட்களுக்கு மேல் 5 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் 2 ரயில்வே ஊழியர்கள் என மொத்தம் ஏழு பேர் அந்த சிறுமியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான், தங்களது மகள் வீட்டிற்கு திரும்பாத நிலையிலும், மகளிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையிலும் “தங்களை மகளை காணவில்லை” என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், ஆட்டோ டிரைவர் கடத்திச் சென்று, பலருக்கும் பல நாட்கள் அந்த சிறுமியை பாலியல் இச்சைக்கு இறையாக்கியது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார். அந்த 7 பேரில் இருவரை கைது செய்தனர். 

இதனால், மற்றவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

முக்கியமாக, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.