இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று (செப்., 21) ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்தை நெருங்குகிறது. நேற்று மட்டும் 75,083 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 55,62,663 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 9,33,185 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 6,53,25,779 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுநோயால் இதுவரை 88,935 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் ஆயிரத்தை ஒட்டிய எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,97,868 என்றாகியுள்ளது. தற்போது வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிகையானது 9,75,861 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 14 லட்சத்து 71 ஆயிரத்து 62 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 74 லட்சத்து 7 ஆயிரத்து 885 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 688 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 68 ஆயிரத்து 874 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளுக்கான பட்டியலில், அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இருப்பினும் தினசரி தொற்று எண்ணிக்கைக்கு நிகராகவும், அதைவிட மேலாகவும் குணமடைவோர் எண்ணிக்கை இருந்து வருகிறது. இதனால் தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியாதான் முதலிடத்தை பெற்றிருக்கிறது. தினமும் அதிக அளவிலான குணமடைந்தோர் எண்ணிக்கையை பெறுவதால் அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

பரிசோதனை அதிகரிப்பு, விரைவில் தொற்று கண்டறிதல், உடனடி தனிமைப்படுத்தல், சிறப்பான சிகிச்சை முறையால் இந்த சாதனையை இந்தியா சாத்தியப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 299 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 18.28 சதவீதம் ஆகும்.

புதிதாக தொற்றை வென்றவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய விகிதத்தை விட அதிக குணமடைந்தவர் விகிதத்தை பெற்றுள்ளன. இதற்கிடையே நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்தவகையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 ஆக அதிகரித்து உள்ளது.

புதிய கொரோனா மரணங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 455 பேர் பலியாகி உள்ளனர். அடுத்ததாக கர்நாடகா 101, உத்தரபிரதேசம் 94, மேற்கு வங்காளம் 61, தமிழ்நாடு 60, ஆந்திரா 57, பஞ்சாப் 56, மத்திய பிரதேசம் 27, டெல்லி 37, அரியானா 29 என பிற மாநிலங்களும் கொரோனா மரணங்களை பெற்றிருக்கின்றன.

மேலும் குஜராத் 17, கேரளா 16, காஷ்மீர், அசாம் மற்றும் ராஜஸ்தான் தலா 14, உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கார் தலா 13, ஒடிசா 10, தெலுங்கானா மற்றும் கோவா 9, திரிபுரா 6, சண்டிகர், இமாசல பிரதேசம் தலா 4, பீகார், சிக்கிம் தலா 3, மணிப்பூர், ஜார்கண்ட் தலா 2 என பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா இறப்பு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த மரணங்களிலும் அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் 32 ஆயிரத்து 671 பேரை பலி கொடுத்திருக்கிறது. அடுத்ததாக தமிழகம் 8,871, கர்நாடகா 8,023, ஆந்திரா 5,359, உத்தரபிரதேசம் 5,047, டெல்லி 4,982, மேற்கு வங்காளம் 4,359, குஜராத் 3,319, பஞ்சாப் 2,813 என கணிசமான பலி எண்ணிக்கையை கொண்டிருக்கின்றன.