மனைவியின் கள்ளக் காதலால் ஆடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆறுமுகநேரியைச் சேர்ந்த மகேஷ், அப்பகுதியில் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

Wifes affair makes husband commit suicide

மகேஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி, கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை 2 வதாக முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தது.

இதனிடையே, மகேஷின் மனைவி அருணாவுக்கு, மகேஷின் நண்பன் ரதனுக்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, இவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இந்த கள்ளக் காதல் விவகாரம் தெரியவந்த நிலையில், மனைவியுடன் மகேஷ் சண்டை போட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

Wifes affair makes husband commit suicide

இதனால், கடும் கோபமடைந்த அருணா, கணவர் மீது காவல் நிலையத்தில் பொய்யான புகார் அளித்துள்ளார். அருணாவின் புகாரின் பேரில், கணவனைக் காவல் நிலையம் வரவழைத்த போலீசார், அவரை அடித்துத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது.

இதனால், இன்னும் மனமுடைந்த மகேஷ், தனது செல்போனில் “மனைவியின் கள்ளக் காதல் குறித்த செய்தியை” ஆடியோவாக பதிவிட்டு, “எனது குழந்தைகளை மீட்டு, எனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றும் உருக்கமாகக் கூறியிருந்தார். இதனையடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த ஆடியோ அப்பகுதியில் பரவி வைரலான நிலையில், மகேஷ் இறந்தது அனைவருக்கும் தெரியவந்தது. இதனையடுத்து, உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மனைவியின் கள்ளக் காதலால், கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.