நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஷ்ரத் ஜஹான் தூக்க மாத்திரை உட்கொண்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகை நுஷ்ரத் ஜஹான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்குள்ள பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Trinamool Congress MP Nusrat Jahan Discharged

எம்.பி.யான பிறகு, நீண்ட நாட்களாகத் தான் காதலித்து வந்த தொழிலதிபர் நிகில் ஜெயினை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் துருக்கியில் நடைபெற்றது. 

இதனிடையே, கடந்த 17 ஆம் தேதி ஷ்ரத் ஜஹானுக்கு பிறந்தநாள் வந்தது. அதனைக் கொண்டாடிய பிறகு, நுஷ்ரத் ஜஹான், அன்று இரவு அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார்.

Trinamool Congress MP Nusrat Jahan Discharged

இதனையடுத்து, தனது பிறந்தநாள் அன்று, அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை உட்கொண்டதால் தான், மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவியது.

Trinamool Congress MP Nusrat Jahan Discharged

இந்நிலையில், நேற்று இரவு சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்ட அவர், தற்போது டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். 
இதனையடுத்து, நுஷ்ரத் ஜஹானுக்கு ஆஸ்த்துமா பிரச்சனை இருந்ததாகவும், இது தற்போது பெரிதானதால், அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் பூரணமாகக் குணமடைந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், நுஷ்ரத் ஜஹான் பற்றி வரும் வதந்திகளைத் தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம் என்றும், அவர் தூக்க மாத்திரை சாப்பிடவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.