பெண் வட்டாட்சியர் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்தில், விஜயா ரெட்டி என்ற பெண், வட்டாட்சியராக பணியாற்றி வந்தார்.

Vijaya Reddy

இந்நிலையில், அவரது அலுவலகத்திற்கு விவசாயி சுரேஷ், நில பிரச்சினை தொடர்பாக மனு கொடுக்க வந்தார். அப்போது, பெண் வட்டாட்சியர் அந்த விவசாயியிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த விவசாயிக்கும் பெண் வட்டாட்சியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த மற்ற ஊழியர்கள் அந்த அறையில் இல்லாத நேரத்தில், பெண் வட்டாட்சியர் மீது, அந்த விவசாயி பெட்ரோலை ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார். 

Vijaya Reddy

இதில், உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், தனது இருக்கையிலிருந்து, அந்த அறையின் கதவை நோக்கி வெளியே ஓடிவந்துள்ளார். அப்போது, அந்த அறையின் கதவு அருகே வந்ததும், அந்த பெண் வட்டாட்சியர் அங்கேயே சுருண்டு விழுந்து, தீ எரிந்துகொண்டிருக்கும் நிலையில் துடிதுடித்துக்கொண்டிருந்தார். தீ உடல் முழுவதும் பற்றி எரிந்த நிலையில், அவர் முழுவதுமாக எரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அப்போது, அங்கு பணியாற்றிய சில ஊழியர்கள், தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், அவர்கள் மீதும் தீ காயம் ஏற்பட்டது.

Vijaya Reddy

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, பெண் வட்டாட்சியரை தீ வைத்து எரிக்கப்பட்ட, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.