“ஒருவன் பலாத்காரம் செய்த உடம்பை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள மனசு வரவில்லை” என்று இளம்பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த மண்ணாங்கட்டிக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர்.  இவரது கடைசி மகள் தனலட்சுமி, அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, புதுவை சின்னக்கடை காந்தி வீதியில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார். 

Puducherry studio owner raped girl sucide

அப்போது, தனலட்சுமிக்கு ஸ்டுடியோ ஓனர் மதுர என்பவர், அடிக்கடி பிரியாணி, டீ, காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். குறிப்பாக, உணவில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். 

உணவு மற்றும் டீ, காபி குடித்த அடுத்த சில நிமிடங்களில் தனலட்சுமி மயங்கி விடுவார். இதனையடுத்து, அவருக்கேத் தெரியாமல் அந்த பெண்ணை மதுர பலமுறை பாலியல் பலாத்காரம் செய்வார். இது தொடர்கதையாகப் பலமுறை நடந்துவந்துள்ளது. 

Puducherry studio owner raped girl sucide

ஒருகட்டத்தில், தனலட்சுமிக்கு எல்லா உண்மைகளும் தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் சண்டைபோட்டு, தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்போது, ஏற்கனவே அவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது.

இதனால், மனமுடைந்த காணப்பட்ட அவர், அங்கிருந்து வேலையைவிட்டு நின்றுள்ளார். இந்நிலையில், தனலட்சுமிக்கு அவரது தந்தை திருமண ஏற்பாடுகளைச் செய்து வந்தார். அதற்காக, ஒரு மாப்பிள்ளையையும் அவர் பார்த்திருந்தார். தை மாதத்தில் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்திருந்த நிலையில், திடீரென்று தனலட்சுமி தன் உடலில் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Puducherry studio owner raped girl sucide

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தனலட்சுமியிடம் வாக்கு மூலம் பெற்றனர். அப்போது, "கடந்த ஜனவரி மாதம் உணவில் மயக்க மருந்து கொடுத்து, மதுர தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருக்கு குடும்பமும் குழந்தைகளும் இருப்பதால், அவரைப் பற்றி புகார் கொடுக்க மனசு வரவில்லை" என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “ஒருவன் பலாத்காரம் செய்த உடம்பை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள மனசு வரவில்லை” என்பதால், தற்கொலைக்கு முயன்றாகவும்” தனலட்சுமி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள மதுராவை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமி, சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

“ஒருவன் பலாத்காரம் செய்த உடம்பை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள மனசு வரவில்லை” என்பது தற்போதைய காலத்தில் மிகப் பெரிய விசயம். குறிப்பாக, இறக்கமே இல்லாமல் திட்டம்போட்டு தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனுக்கு குடும்பமும், குழந்தைகளும் இருப்பதைப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவள் யோசித்த விசயம் உண்மையில் மிகப் பெரிய தியாகமாகப் பார்க்கப்படுகிறது. இந்த தியாகமே பெண்மையின் அடையாளம். இந்த தியாகம் நிச்சியம் தனலட்சுமியைக் காலத்திற்கும் போற்றும் என்பதே பேரூண்மை!