ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களை தனது கணவனுக்கு வீடியோ காலில் Live ஆக காட்டிய மனைவியை, கணவன் உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்து உள்ள ரெட்டி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 58 வயதான ஏழுமலை என்பவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பண்ருட்டி அருகில் உள்ள பகண்டை கோழி பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மனைவியான 51 வயது ஜெயலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறிய நிலையில், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்து உள்ளனர்.

அத்துடன், ஜெயலட்சுமி தனது கள்ளக் காதலனுக்கு தெரியாமல் கள்ளக் காதலனை ரகசியமாகச் சந்தித்து வந்த நிலையில், நிரந்தரமாகக் கள்ளக் காதலர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன் படி, ஜெயலட்சுமி தனது கணவன் முத்துகிருஷ்ணனை பிரிந்து, கள்ளக் காதலன் ஏழுமலையோடு வீட்டை விட்டுச் செல்ல முடிவு செய்தார்.

கள்ளக் காதலன் ஏழுமலை, சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், காதலி ஜெயலட்சுமியின் ஆசையால் அவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அழைத்துக்கொண்டு சென்னையில் வந்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இப்படியாக, அவர்கள் ஏக போக வாழ்க்கை மிகவும் உல்லாசமாக அனுபவித்து வந்து உள்ளனர்.

இந்த சூழலில், சென்னையில் ஒரு மருத்துவமனையில், ஜெயலட்சுமிக்கு வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.

இப்படியாக, கள்ளக் காதலர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கணவன் - மனைவியாகவே வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால், அந்த பகுதியைச் சேர்ந்த வேறு சில ஆண்களுடன் ஜெயலட்சு பாலியல் உறவு வைத்துக் கொண்டு, அந்த பாலியல் உறவு காட்சிகளை எல்லாம், கள்ளக் காதலன் ஏழுமலைக்கு வீடியோ கால் மூலமாக Live ஆக காட்டி உள்ளார். 

இதனைப் பார்த்த கள்ளக் காதலன் ஏழுமலை, கடும் அதிர்ச்சி அடைந்து ஜெயலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தார்.

பின்னர், இது தொடர்பாகத் திட்டமிட்ட ஏழுமலை, ஜெயலட்சுமி பண்ருட்டி அடுத்து உள்ள திருத்துறைக்கு அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

அப்போர், கடந்த 3 ஆம் தேதி ஜெயலட்சுமி அழைத்துக்கொண்டு சென்ற ஏழுமலை, அங்குள்ள சேமங்கலம் மலட்டாற்றில் நடந்து சென்றிருக்கிறார். 

அப்போது, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த இரும்பு உளியால் ஜெயலட்சுமியை குத்தி உள்ளார். இதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஜெயலட்சுமியை, அங்குள்ள வயலில் கிடந்த விறகு, குச்சிகளை எல்லாம் எடுத்து வந்து, ஜெயலட்சுமியின் மேல் போட்டு, அவரை உயிருடன் கொளுத்தி உள்ளார்.

இதில், தீ ஜெயலட்சுமி மீது பற்றி எரிந்த நிலையில், பதறித்துடித்த அவர் உடல் கருகி சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, அவர் அங்கிருந்து தப்பி உள்ளார். இதனையடுத்து. அந்த வழியாகச் சென்றவர்கள், “எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்பதாக” ஆனத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அவர் திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், அங்குத் தடயங்களைச் சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும், “அந்த பெண் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டிருப்பதை, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம்” உறுதி செய்தனர்.

இது தொடர்பாக குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில், அந்த கிராம நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணனிடமே ஏழுமலை, சரணடைந்து உள்ளார். அதனையடுத்து போலீசாரிடம் அவரை ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான், இந்த உண்மைகள் எல்லாம் தெரிய வந்தது. இதனையடுத்து, குற்றவாளியைச் சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.