தடுப்பூசிக்கு தண்ணி காட்டும் 'மு' வைரஸ்! எதற்கும் கட்டுப்படாமல் பரவும் புதிய வைரசால் பீதி!

தடுப்பூசிக்கு தண்ணி காட்டும் 'மு' வைரஸ்! எதற்கும் கட்டுப்படாமல் பரவும் புதிய வைரசால் பீதி! - Daily news

“புதிதாக உருமாறி இருக்கும் 'மு’ என்று அழைக்கப்படும் வைரசானது, தடுப்பூசிகளுக்குத் தப்பி விடுகிற அறிகுறிகள் தென்படுவதாக” உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், தொடர்ந்து புதிது புதிாக உருமாறிக்கொண்டே வருகிறது. 

இதனால், உலகின் அனைத்து நாடுகளும் முடங்கப் போன நிலையில், தற்போது பல்வேறு உலக நாடுகளில் 3 வது அலையும் பரவிக்கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 4 வது அலை இன்னும் சில வாரங்களில் வந்துவிடும் என்றும், கடந்த மாதங்கள் செய்திகள் வெளியானது.

அதன் படி, இப்படி படிப்படியாக புதிது புதிதாக உருமாறிய ஒரு வடிவம், பி.1.621 ஆகும். அதற்கு உலக சுகாதார நிறுவனம் 'மு' என்று பெயர் வைத்துள்ளது.

இப்படி, புதிதாக உருமாறி இருக்கும் 'மு’ என்று அழைக்கப்படும் வைரசானது, கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. 

அதன் பிறகு, உலகின் சில நாடுகளில் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தென் அமெரிக்காவிலும், ஐரோப்பியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளில் பெரிய அளவில் இந்த  'மு’ என்று அழைக்கப்படும் வைரசானது, பரவத் தொடங்கியிருக்கிறது.

அத்துடன், இந்த ‘மு’ எனப்படும் வைரசானது இங்கிலாந்து, அமெரிக்கா, ஹாங்காங்கிலும் தற்போது பரவியிருக்கிறது. 

“இந்த ‘மு’ என்னும் புதிய வைரசை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக” உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

முக்கியமாக, புதிதாக உருமாறி இருக்கும் 'மு’ என்று அழைக்கப்படும் வைரசானது, உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கும் பாதிப்பை வெளிக்காட்டுக் கொண்டிருந்தாலும், தற்போது இதன் பரவல் விகிதம் உலக அளவில் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும், கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளதாகவும், அதே நேரத்தில், இந்த 2 நாட்டிலும், இந்த வகையிலான வைரஸ் தொடர்ந்து அதிகரித்தும் வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால், இந்த புதிய வைரசானது, உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலிலும் இடம் பெற்று உள்ளது. 

‘மு’ என்றழைக்கப்படும் இந்த புதிய வைரஸ், கிட்டவிட்ட உலகின் 39 நாடுகளில் இதன் தாக்கம் காணப்படுகிறது. 

“இந்த வைரசானது, நோய் எதிர்ப்புக்குத் தப்பிக்கும் சாத்தியமான பண்புகளைக் கொண்டிருப்பதை, தடுப்பூசிக்குத் தப்பி விடும் அறிகுறிகளாக உள்ளதாக” உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த வைரஸ், உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5 வது உருமாறிய வைரஸ் என்றும், பட்டியிடப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, “இந்த புதிய உருமாறிய வைரசானது, தடுப்பூசிக்குத் தப்பிவிடும் அறிகுறிகள் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறினாலும், இதை உறுதி செய்ய இன்னும் சில  ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே, இந்தியாவில் 'மு' வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்து வருகிறது. 

அதன் படி, இந்தியாவுக்கு வரும் போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் மேலும் 7 நாடுகள் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment