சாப்பாட்டில் கூடுதலாக ஆட்டுக்கறி வைக்கவில்லை என்று மனைவியை, கணவன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்றைய தினம் கடையில் ஆட்டுக்கறி வாங்கி தன் மனைவியிடம் சமைக்க கொடுத்துள்ளார்.

Maharashtra husband murder wife by pouring kerosene for lunch

இதனையடுத்து, மதியம் கணவன் - மனைவி இருவரும் ஜோடியாகச் சாப்பிட அமர்ந்தனர். அப்போது, அவரது மனைவி சாப்பாடு பரிமாறிக்கொண்டே, அவரும் சேர்ந்து சாப்பிட்டுள்ளார்.

சாப்பாட்டின் இடையே கறி இன்னும் வேண்டும் என்று கணவர் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், மனைவியோ, கறியை வைக்காமல் அவர் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவர், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை, மனைவி மீது ஊற்றி கண் இமைக்கும் நேரத்தில், மனைவியை தீ வைத்து எரித்துள்ளார். 

இதில், தீ எரிந்துகொண்டிருக்கும் நிலையத்தில், அவர் கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதனையடுத்து, அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Maharashtra husband murder wife by pouring kerosene for lunch

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆட்டுக்கறிக்கா கணவனே, மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.