தோட்டத்துக்குக் குளிக்கச் சென்ற பள்ளி மாணவியை, அண்ணன் - தம்பி இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டிற்குத் திருவிழாவிற்காக பிளஸ்-1 மாணவி ஒருவர் வந்துள்ளார். அப்போது, பாட்டி வேலை செய்யும்   தோட்டத்திற்கு, அந்த மாணவி அடிக்கடி சென்று வந்துள்ளார்.

schoolgirl sexual assault

தோட்டத்திற்கு வந்து செல்லும்போதெல்லாம், தோட்டத்தின் அருகில் இருக்கும் மாதவன் வீட்டில் அவர் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். அப்போது, மாதவனுக்கும் அந்த பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று, வீட்டிற்குத் தண்ணீர் குடிக்க வந்த அந்த மாணவியிடம் ஏதோ சில ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாணவியைத் தனிமையில் மாதவன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு மாதவனின் அண்ணன் மது, அங்கே இருந்துள்ளார். 

மாதவனும், மதுவும் 'இரட்டை சகோதரர்கள். அப்போது, இருவரும் சேர்ந்து மாணவியை மாறி மாறி கசக்கிப் பிழிந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், இந்த தகவல் வெளியே தெரிந்தால், தங்களுக்கு ஆபத்து என்று கருதிய இருவரும், அந்த பள்ளி மாணவியைக் கழுத்தைப் பிடித்து நெறித்து, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர்.

இதனிடையே மாணவியைக் காணவில்லை என்று அவரது பாட்டி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியைச் சடலமாக மீட்டனர். மாணவி கொலை தொடர்பாக மாதவன் மீது சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். 

விசாரணையில், மாணவியைத் தாம் காதலித்ததாகவும், அதற்கு அவர் சம்மதிக்காமலிருந்ததால், ஆத்திரத்தில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாணவியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாணவி சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது. 

schoolgirl sexual assault

 இதனைத்தொடர்ந்து, மாதவனிடம் மீண்டும் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, இருவரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, பிறகு கொலை செய்ததை ஒற்றிக்கொண்டுள்ளனர். மேலும், இந்த பாலியல் பலாத்கார கொலை வழக்கில், வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.