விதி என்பது பாலியல் வன்கொடுமை போன்றது என்றும், அதிலிருந்து தப்பிக்க முடியாவிட்டால், அனுபவிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் எம்.பி.ஒருவரின் மனைவி கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா, சமீபத்தில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை ஒன்று பதிவிட்டிருந்தார்.

Anna Linda Eden

அதில், “விதி என்பது பாலியல் வன்கொடுமை போன்றது. அதை எதிர்த்துத் தப்பிக்க முடியாவிட்டால், அதை அனுபவிக்க முயற்சி செய்ய வேண்டியது தான்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்குக் கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தரப்பினரும் அன்னா லிண்டாவுக்கு எதிராக தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து, பொங்கி எழுந்தனர். மேலும், இந்த கருத்துக்கு எதிராக புதிய ஹேஷ்டேக்குகளும் உருவாக்கப்பட்டன.

Anna Linda EdenAnna Linda Eden

இதனைத்தொடர்ந்து, அன்னா லிண்டா தனது சர்ச்சைக்குரிய கருத்தை நீக்கினார். மேலும், இது தொடர்பாக விளக்கம் கொடுத்த அவர், இந்த கருத்து, தான் சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது, நடிகர் ஒருவர் கூறியது என்றும், அதே கருத்தை இப்போது கூறும்போது, அந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அதற்காகத் தான் வருந்துவதாகவும் அன்னா லிண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.