நண்பனுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து, அவரது மகளைக் கதறக் கதற பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மீன்பிடித் தொழிலாளி ஒருவர், தனது நண்பரான 36 வயதான ஆரோக்கிய ஜான் என்பவருடன் சேர்ந்து மீன் பிடிப்பது வழக்கம்.

kanniyakumari 11th student raped by father friend

அப்படி அவர்கள் இருவரும் தினமும் மீன் பிடித்துவிட்டு, மாலையில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.  அப்படி ஒருநாள், ஆரோக்கிய ஜான் நண்பன் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டில் 11 ஆம் வகுப்பு படிக்கும் அழகான இளம் பெண் ஒருவர் வீட்டில் இருப்பது தெரியவந்தsது. இதனையடுத்து, அந்த பெண்ணின் மீது அவருக்கு மோகம் வந்துள்ளது. பார்த்த ஒரே சந்திப்பில் அந்த மோகம் முற்றியுள்ளது.

மேலும், நண்பனின் மனைவிக்குக் காது கேட்காது என்றும், நண்பனின் மகனுக்கு வாய் பேச முடியாது என்பதும் தெரியவந்தது.

இதைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த 11 ஆம் வகுப்பு சிறுமியை எப்படியும் அடைந்துவிட வேண்டும் என்று துடித்த ஆரோக்கிய ஜான் திட்டம்போட்டார்.

kanniyakumari 11th student raped by father friend

அதன்படி, சம்பவத்தன்று, நண்பனுக்கு இரவில் அளவுக்கு அதிகமாக மது வாங்கி ஊற்றிக்கொடுத்துள்ளார். இதில், நண்பன் மயக்கவிடவே, அவரை வீட்டில் வந்து விடுவதுபோல் விட்டுவிட்டு, அவரது மகளை வலுக்கட்டாயமாகக் கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்றும், அந்த பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

பின்னர், தந்தை போதை தெளிந்து எழுந்திருக்கையில், அந்த சிறுமி அதே கோலத்துடன் தந்தை முன் வந்து நின்று, தனக்கு நேர்ந்த அவலங்கள் குறித்து, கூறியுள்ளார்.

kanniyakumari 11th student raped by father friend

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான ஆரோக்கிய ஜானை தேடி வந்தனர். 

இந்நிலையில், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனிடையே, நண்பனினுக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து, அவரது மகளை காமகொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.