டி.வி. நடிகையுடன் கள்ளக்காதல் மோகத்தால் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்திய டி.வி.நடிகர் சிறையில் அடைக்கப்பட்டார்.

'வம்சம்' சீரியலில் ரோஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஜெயஸ்ரீ, ஏற்கனவே திருமணமாகி கணவரை விவகாரத்து செய்த நிலையில், தன்னுடன் நடித்த சக டி.வி. நடிகர் ஈஸ்வரை காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், நடிகர் ஈஸ்வருக்கு இது முதல் திருமணமாகும்.

Isvar-mahalakshmi illegal affair serial actress jayasree

தற்போது, ஜெயஸ்ரீக்கு முதல் கணவர் முதல் 9 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில், இவர்கள் திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்த நிலையில், இவர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டு, ஆத்திரத்தில் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் வயிற்றில் எட்டி உதைத்து, பலமாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ, மருத்துவமனையில் இருந்தபடியே தனது கணவர் மீதும், அவரது தயார் மீதும் புகார் அளித்தார்.

Isvar-mahalakshmi illegal affair serial actress jayasree

இதனையடுத்து, வழக்கப் பதிவு செய்த போலீசார், டி.வி. நடிகர் ஈஸ்வர் மற்றும் அவரது தயார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனையடுத்து, ஈஸ்வர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஈஸ்வரின் தாயாரை ஜாமீனில் விடுவித்தனர்.

இதனையடுத்து, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஜெயஸ்ரீ, செய்தியாளர்களைச் சந்தித்து, தனது கணவர் ஈஸ்வர் மீது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைத் தெரிவித்தார். அதன்படி, “ தன்னுடைய கணவர் ஈஸ்வர், சக சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும், இதுகுறித்து கேட்டபோது, தனது அம்மாவுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவல் நிலையத்தில் ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், “தன்னை திருமணம் செய்து கொள்ளும் போது. தனது கணவர் ஈஸ்வருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது என்றும், இதை நான் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. ஆனால், இது நாளுக்கு நாள் அதிகரித்து, பல முறை அதீத குடியில், ஈஸ்வர் நடு வீட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார் என்றும், ஒருநாள் நான் என்று நினைத்து தனது மகளைக் கட்டியணைத்து தவறாக நடந்துகொள்ள முயன்றார் என்றும் கவலைத் தெரிவித்தார்.

Isvar-mahalakshmi illegal affair serial actress jayasree

தனது கணவர் ஈஸ்வரை இப்படி மாற்றியது எல்லாம், அவர் உடன் நடிக்கும் சக நடிகை மகாலட்சுமியுடன் ஏற்பட்டு உள்ள கள்ளக்காதல் தான் காரணம் என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, தனது பணம் மற்றும் நகைகளைத் தனது கணவர் பிடுங்கி வைத்துக்கொண்டு தன்னிடமிருந்து விவகாரத்து கேட்பதாகவும், அதேபோல், மகாலட்சுமியும் அவரது கணவரிடமிருந்து விவகாரத்து கேட்பதாகவும் பிகிரங்கமாக குற்றம்சாட்டினார். இந்த ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் மூல காரணமாக விளங்கும் மகாலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போது, இந்த விவகாரம் சின்னதிரையில் மட்டுமில்லை தமிழகம் முழுவதும் காட்டு தீ போல் பற்றி எரிந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.