பரவும் கொரோனா வைரஸ்.. பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்...

பரவும் கொரோனா வைரஸ்.. பாதுகாத்துக் கொள்ள சில டிப்ஸ்... - Daily news

பரவும் கொரோனா வைரஸ் நோயிலிருந்து நம்மையே நாம் பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்...

Health and safety tips against Coronavirus

என்ன செய்ய வேண்டும்?

- ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது அவசியம்.

- கிருமி நாசினி மற்றும் சோப்பால் அடிக்கடி கை மற்றும் முகங்களைக் கழுவுதல் அவசியம்.

- வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால், கட்டாயம் கை மற்றும் கால்களை சோப் போட்டு கழுவதல் அவசியம்.

- அன்றாடம் பயன்படுத்தும் டிஷ்யூ பேப்பர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

- இருமல் மற்றும் தும்மல் வரும்போது முகத்தை மாஸ்க் மற்றும் அதற்கு இணையான துணி கொண்டு மூடுவது அவசியம்.

Health and safety tips against Coronavirus

- காய்ச்சல் அறிகுறி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

- தொண்டை மற்றும் நாக்கு பகுதிகள் வறாட்சியாகமால், ஈர பதமுடன் இருப்பது அவசியம்.

- சில நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பதும் மிக அவசியம்.

- பொது மற்றும் வெளி இடங்களுக்குப் போவதைக் கூடுமான வரை தவிர்ப்பது அவசியம்.

 

Health and safety tips against Coronavirus
என்ன செய்யக் கூடாது?

- விலங்குகளிடமிருந்து சற்று விலகி இருப்பது நலம்.

- நன்றாக வேகவைக்கப்படாத அசைவ உணவை உண்ணாமல் இருப்பது நலம். 

- விலங்குகள் விற்பனை கூடங்கள், பண்ணை மற்றும் சந்தைகளுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நலம்.

- பொது இடங்களில் எச்சீலைத் துப்பாமல் இருப்பது நலம்.

- இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பவர்களிடமிருந்து சற்று விலகி இருப்பது நலம்.

- வெளி இடங்கள், பேருந்து அல்லது  ரயில் நிலையங்களில் பயணிக்கும்போது, முகத்தில் மாஸ்க் மற்றும் அதற்கு இணையான துணி கொண்டு மூடுவது நலம்.

Leave a Comment