250 சிறுமிகளைப் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 68 வயதான ஜோயல் லீ ஸ்கார்னெக், அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

France Doctor raped 250 girls

இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அந்த மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், கடந்த 2017 ஆம் ஆண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவுக்கார சிறுமிகள் இருவரும், அந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற சிறுமி ஒருவருமாக அடுத்தடுத்து, அந்த மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

France Doctor raped 250 girls

இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த போலீசார், அந்த மருத்துவரைக் கைது செய்தனர். அத்துடன், அவரது வீட்டில் சோதனையிட்டபோது, அங்கே ஒரு ரகசிய டைரி சிக்கியுள்ளது. அதில், கடந்த 30 ஆண்டுகளில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த சிறுமிகளைப் பயமுறுத்தித் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

France Doctor raped 250 girls

குறிப்பாக, அந்த சிறுமிகளை அவர் எப்படியெல்லாம் பயமுறுத்தினார், எந்த ஸ்டைலில் பாலியல் பலாத்காரம் செய்து, எப்படியெல்லாம் சந்தோசம் அனுபவித்தார் என்பதை, ஒரு கதை போல, வர்ணித்து தனது டைரியில் அவர் எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. இதனைப் படித்த பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள சுமார் 210 பேரிடம் போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அதில், பாதிப்பேர் தற்போது பெரியவர்களாகி உள்ளனர். குறிப்பாகச் சிலருக்குத் திருமணம் ஆகி உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாம் சிறுவயதாக இருக்கும்போது, அவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அத்துடன், தாங்கள் சிறுமிகளாக இருந்ததால், பயந்து இதனை வெளியே சொல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

France Doctor raped 250 girls

இதனையடுத்து, அந்த மருத்துவர் மீதான வழக்கு, மேலும் இறுகி உள்ளது. இந்த வழக்கின் விபரங்கள் வெளியே கசிந்ததால், பிரான்ஸ் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.