இங்கிலாந்தில் 39 பேரை கொன்று சடலங்களுடன் சுற்றித்திரிந்த கன்டெய்னடர் லாரி சிறைபிடிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் எசெக்ஸ் நகரில் உள்ள க்ரேஷ் என்னும்  தொழிற்பேட்டையில், பல்கேரிய நாட்டின் பதிவு எண் கொண்ட  கன்டெய்னடர் லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்தன. இதனையடுத்து, எசெக்ஸ் நகர் போலீசார் கன்டெய்னடர் லாரியை மடக்கிப் பிடித்துச் சோதனையிட்டனர்.

England 39 dead

அதில், 39 பேரின் சடங்கள் இருப்பதைக் கண்டு, போலீசார் அதிர்ந்துபோனார்கள். அதில், ஒருவர் மட்டும் இளைஞர் என்றும், மற்ற 38 பேரும் வயதில் மூத்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, கன்டெய்னடர் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரைக் கைது செய்தனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்த உடனடியாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு, அந்த ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவர் அயர்லாந்தைச் சேர்ந்த மோ ராபின்சன் என்பதும், அவருக்கு  25 வயது இருக்கும் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த கன்டெய்னடர் லாரி வர்ணாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. தற்போது, உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

England 39 dead

அதே நேரத்தில், இந்த 39 சடலங்களும் பல்கேரியாவிலிருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் அயர்லாந்து வழியாகத்தான், இங்கிலாந்திற்குள் கன்டெய்னடர் லாரி உள் நுழைந்திருப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

England 39 dead

இங்கிலாந்தில், இதற்கு முன்பு கடந்த 2000 ஆம் ஆண்டில், கென்ட்டின் டோவர் என்ற இடத்தில், 58 சீன மக்களின் சடங்கள் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல், இங்கிலாந்தில் கன்டெய்னடர் லாரிக்குள் 39 சடங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.