திமுக பிரமுகரை அரிவாள் வெட்டி விட்டு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பி ஓடியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த  கருணாகரன், அப்பகுதியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வருகிறர். இந்நிலையில், தனது டூவிலரில் செங்குன்றத்திலிருந்து வண்டலூர் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, அவரை வழிப்பறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளது.

Attacked

அப்போது, கருணாகரன் பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மர்ம கும்பல், கருணாகரனை கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழவே, அந்த மர்ம கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Attacked

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தன்னை வெட்டியது கம்மாவார் பாளையத்தைச் சேர்ந்த கவாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் என்று, கருணாகரன் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட போலீசார், கவாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள  4 பேரையும் தேடி வருகின்றனர்.