17 வயது சிறுமியைத் திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

சென்னை செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தங்கரையம்பட்டையைச் சேர்ந்த திவாகர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

Chennai lorry driver sexual assault on 17 yo girl Tamil Nadu

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் திவாகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருடைய மனைவி, கணவனைக் கூடவே இருந்து கவனித்துக்கொண்டார்.

இதனால், வீட்டில் உள்ள தனது 2 குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக, ஊரிலிருந்து தனது 17 வயது தங்கையைச் சென்னைக்கு வரவைத்து, வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் திவாகரின் தம்பியான லாரி டிரைவர் தினேஷ்குமார், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Chennai lorry driver sexual assault on 17 yo girl Tamil Nadu

அந்த சிறுமியும், தினேஷ்குமாரை நம்பி, தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறார். ஆனால், இதைப் பயன்படுத்திக்கொண்ட அவன், ஆசை தீர சிறுமியை உல்லாசம் அனுபவித்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இதனையடுத்து, சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது தொடர்பாக, வீட்டில் கேட்டபோது, சிறுமி உண்மையைக் கூறி உள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சிறுமி கெஞ்சியும், தினேஷ் மறுத்துவிட்டான்.

Chennai lorry driver sexual assault on 17 yo girl Tamil Nadu

இதனையடுத்து, சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசா், போக்சோ சட்டத்தின் கீழ் தினேஷ் குமாரைக் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

நன்றாகத் தெரிந்த உறவுக்கார பெண்ணையே, காதல் என்ற பெயரில் நாசம் செய்கிறார்கள் என்றால், தெரியாத பெண்ணை இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்?