கொடூரத்தின் உச்சத்தில் காமகளியாட்டம்!பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற திகில் நிமிடங்கள்!-SPL ARTICLE

இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரத்தின் உச்சமாக எரித்துக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

priyanka reddy murder case

அடுப்படிக்குள் முடக்கிக் கிடந்த பெண்கள் எல்லாம், இன்று சிலிர்த்து எழும் பெண் சிங்கங்களாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை நிர்பயாக்களின் பட்டியல், நம்மூர் காம கொடூரர்கள் சேர்த்து வருவதுதான், மனிதத்தை மண்ணில் போட்டுப் புதைக்கும் பாதக செயலாக அமைந்துள்ளது பெரும் கவலை அளிக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அருகே உள்ள ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பிரியங்கா ரெட்டி என்ற இளம்பெண், வெட்னரி மருத்துவம் படித்துவிட்டு, அங்குள்ள கொல்லூர் அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

priyanka reddy murder case

எப்போதும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வரும் அவர், சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தை அங்குள்ள டோல் பூத்தில் நிறுத்திவிட்டு, காரில் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி உள்ளார்.

அப்போது, அவருடைய இருசக்கர வாகனம் பஞ்சராகிக் காணப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், அந்த பகுதியிலிருந்து லாரி ஓட்டுநர் ஒருவர், தானாக முன்வந்து பஞ்சர் ஒட்டி தருவதாகக் கூறி உள்ளார். ஆனால், அவரைப் பார்த்துச் சந்தேகமடைந்த பிரியங்கா ரெட்டி, “வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று எவ்வளவோ சொல்லியும், கட்டாயப்படுத்தி உதவி செய்வதுபோல் நடித்துள்ளார். 

priyanka reddy murder case

இதனால், சந்தேகமடைந்த பிரியங்கா ரெட்டி, தனது  சகோதரி ரம்யாவுக்கு போன் செய்து, அழுது புலம்பி உள்ளார். மேலும், தனக்குப் பயமாக உள்ளது என்றும், விரைந்து வந்து தன்னை அழைத்துச் செல்லவும் என்று அழுதபடியே கூறியுள்ளார். இதனால், பயந்துபோன ரம்யா, தனது பெற்றோருக்கு போன் செய்து, விபரத்தைச் சொல்ல, சிறிது நேரத்தில் குடும்பமே அவரை தேடி, குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளது. ஆனால், அங்குப் பிரியங்கா ரெட்டியைக் காணவில்லை. அவரது நம்பருக்கு போன் செய்தால், சுச்ஃஆப் என்று வந்துள்ளது. இதனால், மறுதினம் அதிகாலை 3 மணி வரை பிரியங்கா ரெட்டியைத் தேடியுள்ளனர்.

இதனையடுத்து, பயந்துபோன அவரது பெற்றோர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

priyanka reddy murder case

இந்நிலையில், காலை 7 மணி அளவில், அதே பகுதியில் உள்ள சப்வே அருகே பிரியங்கா ரெட்டியை, தீ வைத்து முழுவதுமாக எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்டனர். இதனையடுத்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, அவர் தீயில் எரிந்து கருவாடு போல காணப்பட்டதைக் கண்டு, அவரது சகோதரி கதறி அழுததைப் பார்த்து, அங்குள்ளவர்களுக்கும் கண் கலங்கிவிட்டது. 

பின்னர், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகத் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது, பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது. 

priyanka reddy murder case

அதன்படி, பிரியங்கா ரெட்டியை சுமார் 4 மற்றும் 4 பேருக்கு மேல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும், அதன்பிறகு அவரை துன்புறுத்தி கொலை செய்துவிட்டு, தீ வைத்து எரித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதில், அவரது உடல் முழுவதுமாக எரியாமல் கை மற்றும் கால் பகுதிகளில் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 

இதனால், அதிர்ந்துபோன தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன்படி, பிரியங்கா ரெட்டிக்கு தானாக உதவி செய்ய முன்வந்த லாரி டிரைவர் உள்ளிட்ட மொத்தம் 4 பேரை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் விசாரணைக்குப் பிறகு தான், அந்த கள்நெஞ்சம் பிடித்த காமகொடூரர்கள், திட்டமிட்டே இந்த உச்சபட்ச கொடூரத்தை அரங்கேற்றினார்களா? அல்லது அந்த தருணத்தில் நடந்த நிகழ்வா என்பது தெரியவரும்.

இதனிடையே, பிரியங்கா ரெட்டியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம், அந்த மாநிலத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் குரலும் வலிமையாக ஒலிக்கத்தொடங்கி உள்ளது.

கடந்த கால சமூக அவலங்களிலிருந்து, பெண்கள் இப்போது தான் முட்டிமோதி வெளியே வந்து, சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், அவர்களை கை தூக்கி விடாமலிருந்தாலும் பரவாயில்லை, மாறாக அவர்களை நிர்பயாக்களின் பட்டியல் நாம் சேர்க்காமல், பாதுகாப்போடு பார்த்துக்கொள்வதே உண்மையான ஆண்மைத்தனம் என்று சொல்லத்தோன்றுகிறது.