ஒரு பெண்ணுக்காக 2 கள்ளக் காதலர்கள் அடித்துக் கொண்டு சண்டைபோட்டதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்து உள்ள தில்லங்காடு கிராமத்தைச் சேர்ந்த 52 வயதான செல்வகுமார், அந்த பகுதியில் விவசாயியாக வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி சுஜாதா, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால், செல்வகுமார் தனது 3 பிள்ளைகள் உடன் வசித்து வந்தார். இதில், 2 மகள்களுக்குத் திருமணமாகி அவர்கள் கணவரோடு அவரவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், செல்வகுமாருக்கும் அவரது உறவினரான 38 வயதான சுதா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக் காதல் உறவு ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

அதே போல், அந்த கள்ளக் காதலி சுதாவிற்கும், அந்த பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சுதாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், தனிமையாக இருந்து வந்த சுதா, ஒரே நேரத்தில் இவர்கள் இருவருடனும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவரிடம் பழகி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, சுதாவுடன் பழகுவதில் கள்ளக் காதலர்களான ராமலிங்கத்திற்கும், செல்வகுமாருக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் தான், செல்வகுமார் அங்குள்ள கறம்பைக்காடு கிராமத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு, நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பி உள்ளார். 

அப்போது, தனது இருசக்கர வாகனத்தில் அந்த பகுதியில் உள்ள சுடுகாடு அருகே செல்வகுமார் வந்துகொண்டிருந்த போது, அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், 38 வயதான சுதா உடன் உள்ள கள்ளக் காதல் காரணமாகவே, இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டதில் செல்வகுமார் உயிரிழந்தது தெரிய வந்தது. 

இது தொடர்பாக, ராமலிங்கம் இந்த கொலையைச் செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரையும், கள்ளக் காதலி சுதாவையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.