பாடம் படிக்கச் சென்ற 12 வயது சிறுமியை உதவியாளர் உதவியுடன் பாலியல் பலாத்காரம் செய்த மத குரு, அந்த சிறுமியை பாலைவனத்தில் கதறவிட்டுத் தப்பியோடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தான் நாட்டில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தின் டோபா டெக் சிங் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

அந்த 12 வயது சிறுமி, அங்குள்ள மதப்பள்ளியில் பாடம் கற்பதற்காகச் சென்று உள்ளார். 

அப்போது, அந்த மதப்பள்ளியில் குரி அடியுர் ரஹ்மான் என்கிற இஸ்லாமிய மதகுரு ஒருவர், தனது உதவியாளர் பிபி என்பவரின் உதவியுடன் அந்த 12 வயது சிறுமியை, பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனால், கதறி துடித்த அந்த சிறுமி அழுது துடித்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, சற்று யோசித்த அந்த மது குரு, “எப்படியும் இந்த சிறுமி, இந்த பாலியல் பலாத்காரம் பற்றி வெளியே சொல்லிவிடுவாள்” என்று நினைத்து, அந்த சிறுமியை அங்குள்ள ஒரு பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு அந்த மத குருவும், அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

இதனால், திரும்பி வீடு செல்ல வழி தெரியாமல், அந்த சிறுமி அந்த பாலைவனத்திலேயே அழுதுகொண்டிருந்து உள்ளார். 

அந்த நேரத்தில், அந்த வழியாக வந்தவர்கள், அந்த  சிறுமியிடம் விசாரித்து விட்டு, அருகில்  உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அத்துடன், சிறுமியை மீட்டவர்கள் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த அந்நாட்டு போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தியதின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்படி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மத குரு ரஹ்மானையும், அவருக்கு உதவி செய்த உதவியாளர் பிபி ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு, அந்நாட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கிட்டதட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு நடந்து வந்த இந்த வழக்கில், மதகுரு ரஹ்மான் அந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மக குருவான குரி அடியுர் ரஹ்மானுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மேலும், இந்த பாலியல் குற்றத்திற்கு உதவிய உதவியாளர் பிபிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகள் இருவரும் அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம், அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.