ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகி காதல் வயப்பட்ட நிலையில், திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு, அதன் பின்னர் பெண்ணை மிரட்டியே உல்லாசம் அனுபவித்து வந்த மாப்பிள்ளை, திடீரென்று திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தான் இந்த துயரச் சம்பவம் அரங்கேறி உள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தைச் சேர்ந்த அமோல் சவான், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். 

இதனிடையே, கடந்த 2013 ஆம் ஆண்டு இவருக்கு பேஸ்புக் மூலம் 22 வயதான இளம் பெண் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார். அதன் தொடர்ச்சியாக இருவரில் யார் எந்த பதிவு போட்டாலும், இருவரும் கமெண்ட்ஸ் போட்டு, தங்கள் உறவை மேலும் புதுப்பித்துக்கொண்டே வந்தனர். 

அதன் தொடர்ச்சியாக இருவரும் ஃபேஸ்புக் மெசஞ்சரில் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் வசீகரித்துக்கொண்டு, இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இதனால், அவர்களது காதல் ஃபேஸ்புக்கிலேயே மலரத் தொடங்கியது.

அதன் பிறகு, கடந்த 2016 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்தனர். அதன்படி, ஃபேஸ்புக் காதலர்கள் இருவரும், தங்களது பெற்றோரிடம் தங்கள் காதல் விசயத்தைப் பற்றி கூறி உள்ளனர். 

அத்துடன், அமோல் சவான் வீட்டில் அவரது பெற்றோர் அதிக வரதட்சணை கேட்டதாக தெரிகிறது. ஆனால், அதையும் தருவதற்கும் பெண் வீட்டார் சம்மதித்து உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வீட்டார் பெற்றோர் மற்றம் உறவினர்கள் முன்னிலையில் காதலர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, காதலர்கள் இருவரும் அவ்வப்போது தனியாக சந்தித்து வந்துள்ளனர்.

இப்படியான சந்திப்பின் போது, “திருமணத்தை நிறுத்தி விடுவேன்” என்று, அமோல் சவான் அந்த பெண்ணை மிரட்டியே பல முறை தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி, ஒரு ஆண்டுக்கும் மேலாக அமோல் சவான் அந்த பெண்ணை மிரட்டியே பல முறை உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், மாப்பிள்ளை குறித்து அவர் ஊரில்
விசாரித்து உள்ளனர். இது தகவல், அந்த மாப்பிள்ளையின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து, மாப்பிள்ளை அமோல் சவானின் பெற்றோர் திருமணத்தை
உடனடியாக நிறுத்தி உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்த அந்த இளம் பெண், “ என்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக” அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலன் அமோலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாப்பிள்ளையின் பெற்றோர் மீது போலீசார் வரதட்சணை வழக்கையும் பதிவு செய்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.