தனியாக நடந்து வந்த பெண்.. சிறுவனை வைத்து திருட்டு பயிற்சி கொடுத்த கும்பல்! சென்னையில் அதிர்ச்சி...

தனியாக நடந்து வந்த பெண்.. சிறுவனை வைத்து திருட்டு பயிற்சி கொடுத்த கும்பல்! சென்னையில் அதிர்ச்சி... - Daily news

சென்னையில் தனியாக நடந்து வந்த பெண்ணிடம், ஒரு கும்பல் சிறுவனை வைத்து திருட்டு பயிற்சி கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, கடந்த மாதம் செய்திகள் வெளியானது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகம் உட்பட நாடு முழுதும் ஒவ்வொரு மாதிரியான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, பலரும் வேலை இழந்து தவித்து வருகின்றனர். சிலர், கவுரவம் பார்க்காமல் கிடைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த கொரோனா ஊரடங்கு சிலரைத் திருடர்களாகவும், குற்றவாளிகளாகவும் மாற்றி வருகிறது. அதற்கு ஒர உதாரணம் தான், தற்போது சென்னையில் நடந்திருக்கும் இந்த பகீர் சம்பவம்.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண், சென்னை துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு பணியை முடித்து விட்டு இரவு 8 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள பார்த்தசாரதி சாமி தெரு வழியாக, அந்த பெண் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, லட்சுமியின் பின்னால் அவரை பின் தொடர்ந்து வந்த சிறுவன் ஒருவன், கண் இமைக்கும் நேரத்தில் திடீரென்று அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க ஜெயினை பறித்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி உள்ளான்.

ஒரு நிமிடத்தில் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்த இந்த சம்பத்தில் அந்த பெண் நிலைகுலைந்து போய் உள்ளார். இதனையடுத்து, அந்த சுதாரிப்பதற்குள் சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன், அங்கு நின்றிருந்த இன்னொருவரிடம் அந்த தங்க ஜெயினை ஒப்படைக்கிறான். அதைப் பெற்றுக்கொண்ட அந்த நபரும், அங்கிருந்து மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அங்குள்ள ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஐஸ் அவுஸ் போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த திருடர்கள் பற்றி அவர்களுக்குத் துப்பு கிடைத்தது. பின்னர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், “திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய், சக்திவேல் ஆகிய இருவருடன் 17 வயதான சிறுவன் ஒருவன் என்று மொத்தம் 3 பேர் சேர்ந்து இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரையும் தேடி கண்டுபிடித்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரை கடும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அதாவது, “விஜய் மற்றும் சக்திவேல் இருவரும் சேர்ந்து, அந்த 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்கான பயிற்சி அளித்ததாகவும், அதற்காகவே அந்த சிறுவனை வைத்து இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும்” அவர்கள் கூறி உள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களிடம் இதற்கு முன்பு திருடிய நகைகள் பற்றியும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment