ஐ.பி.எல்., தொடரின் 'டைட்டில் ஸ்பான்சராக' கடந்த 2016 முதல் சீன அலைபேசி நிறுவனம் இருந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலின் விளைவஆக, சீன நிறுவனங்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் சீன ஸ்பான்சர், நிறுவனங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன. அதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) புதியதாக ரூ. 222 கோடிக்கு 'டிரீம் லெவன்' நிறுவனத்தை தேர்வு செய்தது.

ஆனால் இதன் பின்னணியில் சீன நிறுவனம் இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஸ்பான்சர் டெண்டரில் பங்கேற்கும் போது முழுமையான இந்திய நிறுவனம் என தெரிவித்த 'டிரீம் லெவன்', தற்போது சீன தொழில்நுட்ப நிறுவனத்துக்கு 20 முதல் 25 சதவீத பங்குள்ளது என தெரிவித்தது. ஆனால் இது குறைந்த அளவிலான பங்கு என்று அழைக்கப்படுகிறது, மேலும் இந்த பிராண்ட் தன்னை முற்றிலும் இந்திய நிறுவனம் என்று முன்வைக்கிறது. அதனால் தான் டைட்டில் ஸ்பான்சர் போட்டியில் அந்நிறுவனம் பங்கேற்க முடிந்தது. கார்ப்பரேட் சர்க்கிள் என்ற இணையதள கண்காணிப்பு வலைதளமான, வி.சி சர்க்கிள் சீன நிறுவனமான டென்செண்டின் ட்ரீம் 11 இல் 2018 செப்டம்பரில் பணத்தை முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், ட்ரீம் 11 நிறுவனம் ஒரு இந்திய நிறுவனம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்துகிறது. இந்த நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஒப்பந்தம் 720 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது என்று கூறப்பட்டது. இது சீரிஸ் டி ஃபண்டிங் ரவுண்ட் என்று அழைக்கப்படுகின்றது. அந்த வலைதளத்தின் கூற்றுப்படி, ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என்பது விளையாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களான ட்ரீம் 11, ஃபேன்கோட், ட்ரீம்எக்ஸ், ட்ரீம்செட்கோ மற்றும் ட்ரீம் பே போன்ற ட்ரீம் ஸ்போர்ட்ஸை கொண்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் மற்றும் சிஓஓ மற்றும் துணை நிறுவனர் பவித் சேத் ஆகியோரால் இது 2008-ல் உருவாக்கப்பட்டது என்று வலைதளம் தெரிவிக்கின்றது. 2012 இல் இது ப்ரீமியம் ஃபேண்டஸி கிரிக்கெட்டைத் தொடங்கியது. 2014 ஆம் ஆண்டில், ஒரு லட்சம் பயனர்களை இந்த நிறுவனம் தொட்டது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் தொடர் நிதியையும் பெற்றது.

பீகார் கிரிக்கெட் சங்க செயலர் ஆதித்ய வர்மா இதுபற்றி நேற்று கூறுகையில்,''இந்திய விளையாட்டின் நலன் விரும்பி என்ற அடிப்படையில், யு.ஏ.இ.,யில் 13வது ஐ.பி.எல்., தொடர் சிறப்பாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், சீன நிறுவனத்தின் பங்குகளை கொண்டுள்ள டிரீம் லெவன் 'டைட்டில்' ஸ்பான்சரானது, பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கருத்துக்கு விரோதமாக உள்ளது. தவிர, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் ஒரு அணியில் இந்நிறுவனம் மிகப்பெரிய முதலீடு செய்துள்ளது'' என்று கூறியிருக்கிறார்.

ஐ.பி.எல்., ஸ்பான்சராக டிரீம் லெவன் நிறுவனம் 2020 தவிர 2021, 2022 என அடுத்த இரு ஆண்டுக்கு தேர்வு செய்யப்பட்டது. இதற்காக அடுத்த ஆண்டில் ரூ. 240 கோடி தரும் என என செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ``அதிக தொகை கேட்டுள்ளதால் டிரீம் லெவன் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன் இன்னும் சில விஷயங்கள் பேசி தீர்க்க வேண்டும். முந்தைய அலைபேசி நிறுவன ஒப்பந்தம் இன்னும் முடியவில்லை. அவர்கள் ரூ. 440 கோடி தரும் நிலையில், நாங்கள் எப்படி ரூ. 240 கோடிக்கு சம்மதிப்போம்" என்று கூறியுள்ளார்.

இதன்மூலம், வருடத்திற்கு 440 கோடி ரூபாய் விவோவிடம் இருந்து வாங்கிய பிசிசிஐ 240 கோடி ரூபாயை ஏற்க ஒத்துக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. இதனால் இந்த வருடத்திற்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் மட்டும்தான், ட்ரீம் லெவனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தெரியவருகிறது