பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகள் நிலவும் உலகில் 20 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைப் பெற்ற இரண்டாவது நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் வளர்ந்துள்ளது. மாறி வரும் தொழில்நுட்ப சூழலிலும் அதிக அளவிலான முதலீட்டாளர்களை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து, `ஆப்பிள் நிறுவனம் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் அமெரிக்க நிறுவனமாக' உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

கொரோனா பரவல் சூழ்நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களும் நிதிச்சுமையில் சிக்கியுள்ளன. ஆனால் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்களது சந்தை மதிப்பில் குறிப்பிடத்தக்க உயர்வை அடைந்துள்ளன.

ஆப்பிள் நிறுவனம் தனது 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடைந்தது. அதனைத் தொடர்ந்து 2 வருட இடைவெளியில் 2 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பைத் தொட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு இந்த ஆண்டு கிட்டத்தட்ட 60% உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனம் மூன்றாம் காலாண்டில் 59.7 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது.

2 லட்சம் கோடி அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை அடைந்த முதல் நிறுவனமாக சவுதி அரேபியாவின் அரம்கோ உள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 லட்சம் கோடி) எட்டியுள்ளது. இந்த நிலையை அடைந்துள்ள முதல் அமெரிக்க நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது. இதனை அடைய 42 ஆண்டுகள் ஆன நிலையில், 2 லட்சம் கோடியை அடைய இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. 

கடந்த ஜூலை 31ம் தேதி பிரபல எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளி, உலகின் மிக மதிப்புமிக்க பொதுவர்த்தக நிறுவனமாக மாறியது. அதேபோல் அமேசான், மைக்ரோசாஃப்ட், ஆல்பஃபெட் நிறுவனங்கள் ஆப்பிள் அடைந்த 2 லட்சம் கோடி சந்தை மதிப்பை விரைவில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவன பங்குகள் இதுவரை சுமார் 60% உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம், இந்நிறுவனம் அதன் மூன்றாம் காலாண்டில் 59.7 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளும் வளர்ச்சியடைந்துள்ளன.