ஃபேஸ்புக்கில் பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆபாசப் படம் அனுப்பிய சென்னை இளைஞர்! ரூ.5 லட்சம் கேட்டு பெண் மிரட்டல்..

ஃபேஸ்புக்கில் பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆபாசப் படம் அனுப்பிய சென்னை இளைஞர்! ரூ.5 லட்சம் கேட்டு பெண் மிரட்டல்.. - Daily news

ஃபேஸ்புக்கில் பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் ஏற்பட்ட காதலால், சென்னை இளைஞர் ஆபாசப் படம் அனுப்பிய நிலையில், அந்த பெண் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் மோசடி மற்றும் மிரட்டல் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து விட்டன. இதன் காரணமாக, பெண்களை விட தற்போது ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் தான், தற்போது சென்னையில் நடந்து உள்ளது.

சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை இளைஞருக்கு, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஃபேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பை விடுத்து உள்ளார். ஆனால், இதனைப் பார்த்து கண்டுகொள்ளாமல் இருந்த அந்த நபர், சமீபத்தில் அந்த நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு உள்ளார்.

இதனையடுத்து, சென்னை இளைஞரும், அந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் ஃபேஸ்புக் மெஞ்சரில் தொடர்ந்து சாட்டிங்கில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இவர்களுக்குள் இருந்த முகம் தெரியாத நட்பு, முகம் தெரியாத காதலாக மாறியது. இதனால், இருவரும் ஃபேஸ்புக்கில் உருகி உருகிக் காதலிக்கத் தொடங்கினர்.

ஃபேஸ்புக்கிலேயே டபுள் மினிங் மற்றும் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த காதலி, தன்னுடைய காதலனுடைய ஆபாசப் படங்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். “எதிர் புறத்தில், காதலி தானே கேட்கிறாள்” என்று நம்பி, சென்னை இளைஞரும் காதலியை நம்பி, தன்னுடைய ஆபாசப் படங்களை ஃபேஸ்புக்கிலேயே தன்னுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுக் காதலிக்கு அனுப்பி உள்ளார். 

இப்படி ஒன்றன் பின் ஒன்றாகப் படத்தை அந்த காதலி அனுப்பச் சொல்ல, அதற்குச் சென்னையிலிருந்து காதலனும் தொடர்ந்து அனுப்பி வைத்து உள்ளார்.

இப்படி, சென்னை காதலன் தொடர்பான அனைத்து ஆபாசப் படங்களையும் சேமித்து வைத்துக்கொண்ட அந்த பிலிப்பைன்ஸ் காதலி, ஒரு கட்டத்திற்கு மேல், 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கி உள்ளார்.

“பணம் தரவில்லை என்றால், ஃபேஸ்புக்கில் உன்னுடன் நட்பில் உள்ள அனைவருக்கும் இதை அனுப்பி வைத்து விடுவேன்” என்றும், அந்த பிலிப்பைன்ஸ் காதலி மிரட்டி உள்ளார். அப்போது தான், காதல் என்ற பெயரில் அந்த பெண் தன்னை மோசடி செய்துள்ளதை, சென்னை இளைஞன் உணர்ந்து உள்ளான். 

இதனையடுத்து, மானத்திற்குப் பயந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை, எப்படியோ சேர்த்து அந்த பெண்ணிற்குக் கூகுள் பே மூலகமாகச் செலுத்தி உள்ளான். 

2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த பெண், மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மீண்டும் மிரட்டத் தொடங்கி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “நாம் எவ்வளவு பணம் கொடுத்தாலும், இந்த மிரட்டல் நிற்கப்போவது இல்லை. தொடரவே போகிறது” என்பதை உணர்ந்து அந்த இளைஞன், பயந்து போய், சென்னை தி.நகர் காவல் துறை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சைபர் பிரிவு போலீசார், உடனடியாக ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, சம்மந்தப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி உடனான நட்பைத் துண்டித்து உள்ளனர்.

மேலும், கூகுள் பே மூலம் செலுத்திய 2 லட்சம் ரூபாய் பணத்தை, வங்கி அதிகாரிகளிடம் பேசி அதனை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக யாரும், யாரிடமிருந்து எந்த உதவியும் பெறவோ, செய்யவோ வேண்டாம் என்றும், அறிவுறுத்தி உள்ளனர். எனினும், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாசப் படங்களை அனுப்பக் கூடாது என்றும், சமூக வலைத்தளங்களை அனைவரும் கவனமுடன் கையாள வேண்டும் என்று, போலீசார் பலமுறை அறிவுறுத்தியும், பெரும்பாலும் அதையும் மீறிச் செயல்படும் நபர்களால் தான், இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடப்பதாகவும் போலீசார் கவலைத் தெரிவித்தனர்.

Leave a Comment